முஸ்லிம் இடஒதுக்கீட்டை ரத்து செய்து ஓபிசிகளுக்கு வழங்குவோம் - பாஜக தேர்தல் வாக்குறுதி!

முஸ்லிம் இடஒதுக்கீட்டை ரத்து செய்து ஓபிசிகளுக்கு வழங்குவோம் - பாஜக தேர்தல் வாக்குறுதி!

தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அது பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

தெலங்கானா மாநில பாஜக தலைவரும், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சருமான கிஷன் ரெட்டி, நேற்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

'வருகிற நவம்பர் 3-ம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கின்றனர். தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவினரின் வேட்புமனு தாக்கல் விரைவில் தொடங்கும்' என்று கூறினார்.

பாஜக - தாமரை
பாஜக - தாமரை

தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவர் தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதைக் குறிப்பிட்ட கிஷன் ரெட்டி, இது தெலங்கானாவில் ஒரு குறிப்பிடத்தக்க புரட்சியை ஏற்படுத்தும் என்றார். மேலும், தெலங்கானாவில் தலித் தலைவரை முதலமைச்சராக்குவேன் என சந்திரசேகர் ராவ் அளித்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்கிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

தெலங்கானா தேர்தல்
தெலங்கானா தேர்தல்

தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வரும்பட்சத்தில் முஸ்லீம் இட ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்டு, அந்த சலுகைகள் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். தெலங்கானா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. டிசம்பர் 5-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in