பிரதமர் மோடி தலைமையை ஏற்று யார் வந்தாலும், அவர்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு திறந்திருக்கும் என்றுதான் அமித் ஷா கூறியிருக்கிறார். அவர் அதிமுகவையோ அல்லது குறிப்பிட்டு எந்த கட்சியையோ சொல்லவில்லை. நாங்களும் அதைத்தான் சொல்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, " பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை ஏற்று 15 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களும், முன்னாள் மக்களவை உறுப்பினர் ஒருவரும் என 16 பேர் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இவர்கள் அனைவரும் மூத்த தலைவர்கள். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும் என்ற ஒருமித்தகருத்துடன் இவர்கள் அனைவரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையை ஏற்று யார் வந்தாலும், அவர்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு திறந்திருக்கும் என்றுதான் அமித்ஷா கூறியிருக்கிறார். அவர் அதிமுகவையோ அல்லது குறிப்பிட்டு எந்த கட்சியையோ சொல்லவில்லை. நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள்கூட நாளை வந்து இணையலாம். எனவே, தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு எல்லோருக்கும் திறந்திருக்கிறது என்பதுதான் அமித்ஷாவின் பதில்.
திமுகவும், பாஜகவும் கொள்கை ரீதியாக இரு துருவங்களாக இருக்கிறோம். எனவே, அவர்கள் தேஜகூட்டணிக்கு வரப்போவதில்லை. அப்படி வந்தாலும் ஏற்றுக்கொள்ளப்போவதும் இல்லை. கூட்டணிக்கு எத்தனையோ கட்சிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேரமும் காலமும் வரும் போது அனைவருக்கும் தெரியும். நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக கூட்டணிக்கு இழுக்கவில்லை. விருப்பமுள்ளவர்கள் மட்டும் எங்களுடன் பயணம் செய்கிறார்கள்.
முதல்வர் மூன்றாவது முறையாக வெளிநாடு பயணம் சென்றிருக்கிற காரணத்தால், அவர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 50 ஆண்டுகாலம், தான் அரசியலில் இருப்பதாக டி.ஆர்.பாலு கூறுகிறார். அரசியலில் எத்தனை ஆண்டுகள் இருந்தோம் என்பது முக்கியமில்லை. எப்படி இருந்தோம் என்பது தான் முக்கியம். டி.ஆர்.பாலு ஊழல்வாதி மட்டுமல்ல, அவர் தரம் தாழ்ந்த ஒரு அரசியல்வாதி. வினாசகாலம் விபரீத புத்தி என்பது சரியாக டி.ஆர்.பாலுவுக்கு பொருந்தும்" என்று கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!
இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!
8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!
நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!