களையிழந்த தேர்தல் - குஜராத்தில் 2014, 2019 தேர்தல்களை விட குறைந்த வாக்குப்பதிவு... பாதிப்பு யாருக்கு?

குஜராத் தேர்தல்
குஜராத் தேர்தல்

குஜராத் மாநிலத்தில் 2014, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களைவிட, இந்தாண்டு தேர்தலில் வாக்குப்பதிவு வெகுவாக குறைந்துள்ளது. இது அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ளது. இதில், குஜராத்தில் மொத்தமுள்ள் 26 தொகுதிகளில் 25 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. இதில் பதிவான வாக்குசதவிகிதங்களின் முதல்கட்டப் புள்ளி விவரங்களை மத்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த இரண்டு தேர்தல்களை விட மிகக் குறைவான எண்ணிக்கையில் வாக்குகள் பதிவானதும் தெரிந்துள்ளது.

குஜராத்
குஜராத்

கடந்த 2019 இல் முடிந்த மக்களவை தேர்தலில் குஜராத்தின் வாக்கு சதவிகிதம் 64.11. இது, 2014 இல் 63.66 சதவிகிதமாக இருந்தும், அனைத்து தொகுதிகளிலும் பாஜகவே வென்றன. ஆனால், நேற்று முடிந்த வாக்குப்பதிவானது மிகப்பெரிய அளவில் குறைந்து வெறும் 57 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. இம்மாநிலத்தில் அதிக வாக்குகளாக 68.75 சதவிகிதம் பைருச் தொகுதியில் பதிவாகி இருந்தன. இங்கு இந்தியா கூட்டணியின் சக உறுப்பினரான ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் சைத்ரா வாஸவா போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 1998 முதல் பாஜக எம்.பியாக ஏழாவது முறையாக தொடரும் மன்சுக் வாஸவா பாஜகவிற்காகப் போட்டியிடுகிறார்.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

குஜராத்தின் 26 தொகுதிகளில் காங்கிரஸ் 24 இல் போட்டியிடுகிறது. மீதம் உள்ள பைருச், பாவ்நகர் தொகுதிகள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பைரூச்சில் 2019 தேர்தலில் 73.49 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. சட்டப்பேரவைக்காக நடைபெற்ற ஐந்து தொகுதிகளில் சராசரியாக 60 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததை அடிப்படையாகக்கொண்டு குஜராத்தின் 25 தொகுதிகள் யாருக்கு என்ற விவாதம் சூடாகியுள்ளது. ஏனெனில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமாக குஜராத் உள்ளது. பாஜக ஆதிக்கம் கொண்ட இம்மாநிலத்தில் மார்ச், 1998 முதல் தொடர்ந்து அக்கட்சியின் முதல்வர்களே தொடர்கின்றனர். இதில், கடந்த 2001 முதல் மே 22, 2014 வரை முதல்வராக நரேந்திர மோடி இருந்ததும் நினைவுகூரத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in