பதவி பறிப்புக்கு என்னுடைய வெற்றி தான் பதிலடி: பாஜகவுக்கு எதிராக சூளுரைத்த மஹுவா மொய்த்ரா!

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

கிருஷ்ணா நகர் தேர்தல் வெற்றியே, தனது எம்பி-பதவியை பறித்த பாஜகவின் சதித்திட்டத்துக்கு தகுந்த பதிலடியாக இருக்கும் என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார்.

மஹுவா மொய்த்ராவின் எம்பி- பதவி பறிப்பு
மஹுவா மொய்த்ராவின் எம்பி- பதவி பறிப்பு

மேற்கு வங்க மாநிலம், கிருஷ்ணா நகர் மக்களவைத் தொகுதி முன்னாள் எம்பி-யும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமானவர் மஹுவா மொய்த்ரா. இவர் மீது, நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்விகள் எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் ஆதாயம் பெற்றதாக, பாஜக எம்பி நிஷிகாந்த் தூபே புகார் அளித்தார். அதன்பேரில் மக்களவை நெறிமுறை குழு விசாரணை நடத்தி, தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ராவின் எம்பி., பதவி பறிக்கப்பட்டது.

மேலும், இந்த புகார் தொடர்பாக சிபிஐ-யும் வழக்குப்பதிவு செய்து அவரது இல்லத்தில் சோதனை நடத்தியது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு சிபிஐ சார்பில் சம்மனும் அனுப்பப்பட்டது.

தேர்தல் பிரச்சாரத்தில் மஹுவா மொய்த்ரா
தேர்தல் பிரச்சாரத்தில் மஹுவா மொய்த்ரா

இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில், கிருஷ்ணா நகர் தொகுதியில் மஹுவா மொய்த்ரா மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இச்சூழலில் தேர்தல் வெற்றியே, தனது எம்பி-பதவியை பறித்த பாஜகவின் சதி மற்றும் சிபிஐ சோதனை, சம்மன்களுக்கு தகுந்த பதிலடியாக இருக்கும் என மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கொல்கத்தாவில் இன்று பேசிய மஹுவா மொய்த்ரா, “எனது வெற்றியில் எந்த சந்தேகமும் இல்லை. இது எவ்வளவு பெரிய வெற்றியாக இருக்கப் போகிறது என்பது ஜூன் 4 அன்று முடிவு செய்யப்படும். என் பதவியைப் பறித்ததற்கும், எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கும் சதித்திட்டம் தீட்டுவோருக்கு பொருத்தமான பதிலடியாக எனது வெற்றி இருக்கும்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...    

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in