லியோவை திரையிட விடமாட்டோம்... வாட்டாள் நாகராஜ் அதிரடி; விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

  வாட்டாள் நாகராஜ்
வாட்டாள் நாகராஜ்

காவிரி நீரை கேட்டால், கர்நாடகாவில் லியோ திரைப்படத்தை வெளியிடவிட மாட்டோம் என கன்னட அமைப்பைச் சேர்ந்த வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ள கருத்து, விஜய் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு-கர்நாடக எல்லையான ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது அமைப்பினர் முயற்சி செய்தனர். இதையடுத்து தமிழ்நாடு எல்லைக்குள் நுழைய முயன்ற, நாகராஜ் உட்பட 80 பேரை கர்நாடக காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றினர்.

தமிழ்நாட்டிற்குள் நுழைய முயன்ற வாட்டாள் நாகராஜ் கைது
தமிழ்நாட்டிற்குள் நுழைய முயன்ற வாட்டாள் நாகராஜ் கைது

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ், ”காவிரி நீரை தமிழ்நாடு அரசு கேட்டால், நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம். கர்நாடகாவில் லியோ திரைப்படத்தை திரையிடும் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்துவோம்” என எச்சரிக்கை விடுத்தார். இதனால் தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வாட்டாள் நாகராஜின் இந்த கருத்து, விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in