குஷ்பு தமிழ் பேசுவதே பெரிய விஷயம்... சர்ச்சை பேச்சை சமாளித்த வானதி சீனிவாசன்!

தூத்துக்குடி விமான நிலையத்தில் வானதி சீனிவாசன் பேட்டி
தூத்துக்குடி விமான நிலையத்தில் வானதி சீனிவாசன் பேட்டி

குஷ்பு வேறு மொழி பேசக் கூடியவர் என்பதால் வார்த்தைக்கான அர்த்தம் புரியாமல் பேசி இருப்பார் எனவும், அதனால் அவரது வார்த்தையில் குறை சொல்ல ஒன்றுமில்லை எனவும் பாஜக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜகவின் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவும், பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தூத்துக்குடிக்கு வருகை தந்திருந்தார். நிகழ்வுகளை முடித்துக்கொண்டு தூத்துக்குடி விமான நிலையத்தில், இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”கோவையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் பிரதமரை தரக்குறைவாக விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது. பாஜக தலைமையிலான மத்திய அரசு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை விட தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொடுத்துள்ளது. 11 மருத்துவக் கல்லூரிகள், தென்மாவட்டத்தின் வளர்ச்சிக்காக இரட்டை ரயில் பாதை திட்டம், இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் போன்ற பல திட்டங்களை மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுத்துள்ளது.” என்றார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

மேலும், “கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோடிக்கு எதிர்ப்பலையை உருவாக்கி 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. ஆனால் திமுக உறுப்பினர்கள் தமிழகத்திற்கு எந்த திட்டங்களையும் பெற்று தரவில்லை. தற்போதும் பிரதமர் மோடிக்கு எதிரான அலையை ஏற்படுத்த திமுக முயற்சி செய்து வருகிறது. அந்த முயற்சி வெற்றி பெறாது. போதைப் பொருட்கள் கடத்தல் மேற்கொள்பவர்கள், திமுகவினரோடு எவ்வளவு நெருக்கமாக உள்ளனர்?. அவர்கள் குடும்பத்திற்கு என்னென்ன உதவிகள் செய்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே” என்றார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பேட்டி
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பேட்டி

குஷ்பு மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக அவதூறாக பேசியுள்ளது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நடிகை குஷ்பு தமிழ் பேசுவதே பெரிய விஷயம். அவர் வார்த்தையின் அர்த்தம் புரியாமல் பேசி இருப்பார். குஷ்பு வேறு மொழி பேசுபவர் என்பதால் அர்த்தம் புரியாமல் கூறியிருப்பார். அவரது வார்த்தையில் குறை சொல்ல ஏதும் இல்லை” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டேன்... அலர்ட்டான ரஜினிகாந்த்!

பாஜக வேட்பாளராக களமிறங்கும் மைசூர் மகாராஜா!

அமைதியாக இருப்பது பலவீனம் இல்லை... நடிகை வரலட்சுமி ஆவேசம்!

புடவை கட்டி பீர் பாட்டிலை தலையில் வைத்து குத்தாட்டம் போட்ட மூதாட்டி... வைரலாகும் வீடியோ!

கோபி மஞ்சூரியனை தடைசெய்ய முடியாது... காரணம் சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in