பாஜக வேட்பாளராக களமிறங்கும் மைசூர் மகாராஜா... முதல்வர் சித்தராமையாவுக்கு செக்!

மைசூரு மகாராஜாவான யதுவீர் கிருஷ்ண தத்தா சாமராஜ வாடியார்
மைசூரு மகாராஜாவான யதுவீர் கிருஷ்ண தத்தா சாமராஜ வாடியார்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவுக்கு செக் வைக்கும் வகையில், மைசூரு சமஸ்தானத்தின் தற்போதைய மகாராஜாவை மைசூரு தொகுதி மக்களவை வேட்பாளராக பாஜக அறிவித்திருக்கிறது.

மக்களவை தேர்தலுக்கான கர்நாடக மாநிலத்தின் 20 வேட்பளர்கள் அடங்கிய பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் சுவாரசிய அம்சமாக, மைசூரு தொகுதிக்கு மைசூரு மகாராஜாவான யதுவீர் கிருஷ்ண தத்தா சாமராஜ வாடியார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

யதுவீர் கிருஷ்ண தத்தா சாமராஜ வாடியார்
யதுவீர் கிருஷ்ண தத்தா சாமராஜ வாடியார்

மைசூரு அரச குடும்பத்தில் அரசியல் புதிதல்ல. ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜா வாடியார் 4 முறை காங்கிரஸ் சார்பில் நின்று வென்றிருக்கிறார். பாஜக சார்பில் ஒரு முறை நின்று தோல்வியும் அடைந்திருக்கிறார். இப்போது அவரது தத்துப்பிள்ளையான தற்போதைய மைசூரு மகாராஜாவான யதுவீர் கிருஷ்ண தத்தா சாமராஜ வாடியார் பாஜக வேட்பாளராகி இருக்கிறார்.

மைசூரு பிராந்தியம் தற்போதைய முதல்வர் சித்தராமையாவின் செல்வாக்கு பெற்றது. அங்கே பாஜகவின் நடப்பு எம்பியாக 2 முறை இருந்த பிரதாப் சிம்ஹாவுக்கு இம்முறை சீட் மறுக்கப்படிருக்கிறது.தொகுதி மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தபோதும், பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் நாடாளுமன்றத்தில் நுழைந்த சில கிளர்ச்சியாளர்களால் ஆளும் பாஜகவுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது.

எனவே இம்முறை பிரதாப் சிம்ஹாவுக்கு சீட் மறுத்ததோடு, பிராந்தியத்தில் செல்வாக்கு பெற்றிருக்கும் மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு செக் வைக்கும் வகையில் மைசூரு மகாராஜா யதுவீர் கிருஷ்ண தத்தா சாமராஜ வாடியாரை சம்மதிக்கச் செய்து வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக தலைமை.

பிரதாப் சிம்ஹா
பிரதாப் சிம்ஹா

இதற்காக மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் நேரடியாக மைசூரு மகாராஜாவை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். மோடியின் மைசூரு வருகையின் போதும், அமித் ஷாவின் தேர்தல் பிரச்சார வலத்தின் போதும் பலமுறை மைசூர் அரண்மனைக்கு விஜயம் செய்திருக்கிறார்கள். இம்முறை யதுவீர் கிருஷ்ண தத்தா சாமராஜ வாடியாரை சம்மதிக்கச் செய்ய, அவரது மாமனாரும் ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக தலைவருமான, துங்கர்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் சிங் மூலம் அழுத்தமும் கொடுக்கப்பட்டது.

மைசூரு பிராந்தியத்தின் கல்வி, விவசாயம், உள்கட்டமைப்பு வசதிகள் பலவற்றில் குறிப்பிடத்தக்க சேவைகளை செய்து வரும் மைசூரு ராஜவம்சத்தினர் மீது அப்பகுதி மக்களுக்கு விசுவாசம் உண்டு. மைசூரு மகாராஜாவை வேட்பாளராக்கியதன் மூலம் தற்போது அந்த அபிமானத்தை பாஜக அறுவடை செய்ய காத்திருக்கிறது. கூடவே அப்பகுதியில் அரசியல் செல்வாக்கு படைத்த காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவுக்கு செக் வைத்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மாங்கல்ய வரம் தரும் ‘காரடையான் நோன்பு... வழிபடும் முறை... சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

இந்த 23 வகை நாய்களை இனி வீட்டில் வளர்க்கக்கூடாது... மத்திய அரசு அதிரடி உத்தரவு!

வாட்ஸ்-அப் செயலியில் அசத்தலான அப்டேட்... பயனர்கள் மகிழ்ச்சி!

பகீர்... காதலியின் கையைத் துண்டித்த காதலன்: வேறு ஒருவருடன் நிச்சயமானதால் வெறிச்செயல்!

அதிமுகவுடன் தான் கூட்டணியா?...தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in