அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டேன்... அலர்ட்டான ரஜினிகாந்த்!

விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டி
விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டி
Updated on
2 min read

தமிழக அரசியல் களம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோது அதனை சூசகமாகத் தவிர்த்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ஹைதராபாத்தில் இருந்து ‘வேட்டையன்’ படப்பிடிப்பு முடித்து அவர் சென்னை திரும்பிய போதுதான் இவரிடம் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.

 ரஜினிகாந்த் உடன் இயக்குநர்  ஞானவேல்
ரஜினிகாந்த் உடன் இயக்குநர் ஞானவேல்

'வேட்டையன்’ படப்பிடிப்பிற்காக சென்னை- ஹைதராபாத் என மாறி மாறி பறந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். 'ஜெயிலர்’, ‘லால் சலாம்’ எனப் படங்களுக்குப் பிறகு அவரது ரசிகர்கள் அடுத்தப் படத்தை எதிர்பார்த்துள்ளனர்.

ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் கேரளா, கன்னியாகுமரி, சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இருந்து ’வேட்டையன்’ படப்பிடிப்பிற்காக கடந்த 9ம் தேதி ஹைதராபாத் புறப்பட்டு சென்றிருந்த ரஜினிகாந்த் படப்பிடிப்பை முடித்து விட்டு இன்று சென்னை திரும்பினார்.

ரஜினிகாந்த்...
ரஜினிகாந்த்...

அப்படி அவர் சென்னை திரும்பும்போதெல்லாம் விமான நிலையத்தில் கேள்வி கேட்பது வழக்கம். அரசியல் களம் பரபரப்பாகி இருக்கும் இந்த சமயத்தில் அவரிடம் தமிழக அரசியல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. சமீப காலமாக திமுக அரசிடம் அதிகம் நெருக்கம் காட்டி வரும் ரஜினிகாந்த், இந்தக் கேள்வியை முடிக்கும் முன்னரே, ’அரசியல் கேள்விகள் வேண்டாம். பதில் சொல்ல மாட்டேன்’ என சிரித்துக் கொண்டே பேசியிருக்கிறார்.

சமீபத்தில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டபோது, அதற்கு ஆதரவு தெரிவித்து ரஜினிகாந்த் நான்கு வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. அதனால், அது தொடர்பான கேள்விகள் வருமோ என நினைத்து அரசியல் தொடர்பான கேள்விகளை ரஜினி சூசகமாகத் தவிர்த்து இருப்பதாக ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

மாங்கல்ய வரம் தரும் ‘காரடையான் நோன்பு... வழிபடும் முறை... சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

இந்த 23 வகை நாய்களை இனி வீட்டில் வளர்க்கக்கூடாது... மத்திய அரசு அதிரடி உத்தரவு!

வாட்ஸ்-அப் செயலியில் அசத்தலான அப்டேட்... பயனர்கள் மகிழ்ச்சி!

பகீர்... காதலியின் கையைத் துண்டித்த காதலன்: வேறு ஒருவருடன் நிச்சயமானதால் வெறிச்செயல்!

அதிமுகவுடன் தான் கூட்டணியா?...தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in