‘மாநில அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள்’ உத்தவ் தாக்கரே உக்கிரம்!

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

‘மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதால், உடனடியாக அங்கே ஆட்சியை டிஸ்மிஸ் செய்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள்’ என கோரியிருக்கிறார் சிவசேனா கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் நாளுக்குநாள் சீர்கெட்டு வருவதால், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் சிவசேனா(உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே இன்று ஆவேசம் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

முன்னதாக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில், சிவசேனா தலைமையிலான ஆட்சி மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்து வந்தது. முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக கலகக்குரல் எழுப்பிய ஏக்நாத் ஷிண்டே, சிவசேனாவை செங்குத்து வாக்கில் பிளந்துகொண்டு பாஜக உடன் கூட்டணி அமைத்தார். அவரை முதல்வராக கொண்ட ஆட்சியில் பின்னர், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அதே போன்று பிளந்துகொண்டு தாவியது.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சிக்கு எதிரான வாய்ப்புகளைத் தேடிவந்த உத்தவ் தாக்கரேக்கு, அண்மைக்காலமாக மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் வழி செய்துள்ளன. அவற்றை முன்வைத்து ஆட்சிக் கலைப்பை கோரியதுடன், கொலைகார கும்பல்களை ஆளும்கட்சியினர் பாதுகாப்பதாகவும் உத்தவ் குற்றம்சாட்டி வருகிறார்.

பிப்ரவரி 2 அன்று மும்பை அருகே உல்ஹாஸ்நகரில் உள்ள காவல் நிலையத்தில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் உள்ளூர் தலைவரை, பாஜக எம்எல்ஏ கன்பத் கெய்க்வாட் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சித்தார். நிலத் தகராறு மற்றும் அரசியல் போட்டி காரணமாக நிகழ்ந்த இந்த சம்பவத்தால் துப்பாக்கிச் சூடுக்கு ஆளானவர் கவலைக்கிடமானார்.

ஏக்நாத் ஷிண்டே - உத்தவ் தாக்கரே.
ஏக்நாத் ஷிண்டே - உத்தவ் தாக்கரே.

அதே போன்று நேற்று முன்தினம் உள்ளூர் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான மொரிஸ் நோரோன்ஹாவால் என்பவர், ஃபேஸ்புக் நேரலையின் போது உத்தவ் கட்சியின் உள்ளூர் தலைவரான வினோத் கோசல்கரின் மகனான அபிஷேக் கோசல்கரை சுட்டுக் கொன்றதாக பதற்றம் எழுந்தது. ஆனால் நொரோன்ஹா தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக மும்பை போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை அடுத்து, மகாராஷ்டிராவின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில், உள்துறை அமைச்சகம் அவசரமாக தலையிட வேண்டும் என சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!

ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!

ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in