சவுக்கு சங்கர் விஷயத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரிதான்... டிடிவி தினகரன் அதிரடி!

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

பத்திரிக்கை சுதந்திரம் என்று யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது. எனவே சவுக்கு சங்கர் விஷயத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரிதான் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பெண் போலீஸ் பாதுகாப்பில் சவுக்கு சங்கர்
பெண் போலீஸ் பாதுகாப்பில் சவுக்கு சங்கர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் மற்றும் வராகி அம்மன் கோயில்களில் இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஜூன் 4ம் தேதி தமிழகத்தில் உள்ள மக்கள் விரோத திமுக அரசை 2026 சட்டமன்றத் தேர்தலில் முடிவு கட்டும் விதமாக வருகின்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் இருக்கும். சவுக்கு சங்கர் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மற்றும் காவல் துறையினர் பற்றி பொதுவெளியில் கீழ்த்தரமாக பேசி உள்ளதை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியாது.

பத்திரிக்கை சுதந்திரம் என்று யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது என்பதற்கு இது முன் உதாரணம். இந்த விஷயத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரிதான்.

திருவண்ணாமலை கோயிலில் டிடிவி தினகரன் சாமி தரிசனம்
திருவண்ணாமலை கோயிலில் டிடிவி தினகரன் சாமி தரிசனம்

தற்போது போக்குவரத்து துறையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் என்பதற்கு அடிப்படை காரணமே முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதது தான்.

தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் காவலர்களுக்கு பேருந்து இலவச பயணம் என்று அறிவித்துவிட்டு இதுவரை அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்ற வில்லை. தேர்தல் முடிவுகளை பொறுத்து அதிமுகவின் நிலை கூடிய விரைவில் தெரியவரும்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகிறது மழை!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு... குரூப் 2, 2ஏ பாடத்திட்டம் மாற்றம்!

மே 28 முதல் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு; காவல் துறை அதிரடி

தாமதமாகும் ரெமல் புயல்... கடல் கொந்தளிப்பால் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

சென்னையில் திடீர் கனமழை பெய்தால்? தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா முக்கிய தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in