தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகிறது மழை!

கனமழை
கனமழை

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமடைந்திருக்கிறது. தென் மாவட்டங்களில் பெய்து வந்த மழை, பின்னர் வட மாவட்டங்களிலும் கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ரெமல் புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்

அதாவது,மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று காலை 5:30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

இது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8:30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வங்கதேச-கேப்புப்பாராவிலிருந்து சுமார் 730 கி.மீ தெற்கு-தென்மேற்கேயும் மற்றும் மேற்குவங்காள- கேன்னிங்லிருந்து சுமார் 750 கி.மீ தெற்கேயும் மையம் கொண்டுள்ளது.

ரெமல் புயல்
ரெமல் புயல்

இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுப்பெற்று, 25.5.2024 காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக 25.05.2024 இரவு வலுப்பெற்று, 26.5.2024 நள்ளிரவு தீவிர புயலாக வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையைக் கடக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை
நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை

இதையொட்டி தமிழ்நாட்டில் ஒரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in