
திமுக மகளிரணி சார்பில் நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க சென்னைக்கு வந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து #GoBackSona என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் இன்று மகளிர் உரிமை மாநாட்டு நடைபெறுகிறது. அதில், மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதவை உடனே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்திற்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, பிரியங்கா உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சென்னை வந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இருவரையும் வரவேற்றார். அப்போது, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக பொருளாளரும், எம்.பியுமான டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர். இந்நிலையில், எக்ஸ் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #GoBackSona என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா உதவியதாக கூறி, தமிழ் அமைப்பினரும், எதிர்க்கட்சி என்ற நிலைப்பாட்டுடன் பாஜவினரும் இந்த ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...