பகீர்... காதலி வீட்டார் மயக்க மருந்து கொடுத்து சுன்னத் செய்து விட்டனர்... கதறும் காதலன்!

கவலை
கவலை

மயக்க மருந்து கொடுத்து தனக்கு காதலி வீட்டார் சுன்னத் (விருத்தசேதனம்) செய்து மதமாற்றம் செய்து விட்டதாக இளைஞர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அலிகாரைச் சேர்ந்தவர் தரம் சிங். இவர் ஜீனத் என்பவரைக் காதலித்து வந்தார். அத்துடன் அவரைத் திருமணம் செய்ய விரும்பினார். இதுகுறித்து எனது குடும்பத்தினருடன் வந்து பேசுங்கள் என்று ஜீனத் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஜீனத் வீட்டிற்கு தரம் சிங் சென்றுள்ளார். அங்கு அவருக்கு இனிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே தரம் சிங் மயக்கமாகியுள்ளார். சுமார் 2 மணி நேரம் கழித்து சுயநினைவு திரும்பிய போது தனக்கு சுன்னத் (விருத்தசேதனம்) செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அப்போது ஜீனத் குடும்பத்தினர் தன்னை மதம் மாறும்படி கூறியுள்ளனர். இதுகுறித்து கேட்ட தரம்சிங் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் ஜீனத் குடும்பத்தினர் மானபங்கம் செய்ததாக புகார் அளித்தாக கூறப்படுகிறது.

சுன்னத் செய்ததாக புகார்
சுன்னத் செய்ததாக புகார்

தனக்கு நிகழ்ந்த கொடூரம் குறித்து எஸ்எஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் தரம்சிங் புகார் அளித்துள்ளார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தரம் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

தரம் சிங்குடன் காவல் நிலையம் வந்த முன்னாள் மேயர் சகுந்தலா பார்தி, " தரம் சிங் மதம் மாற்றப்பட்டதற்கான அடையாளம் இருக்கிறது. போதைப் பொருளைப் பயன்படுத்தி மதமாற்றம் செய்து ஏமாற்றப்பட்டுள்ளார், அத்துடன் கட்டாயத்தின் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தற்போது அலிகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in