‘சனாதனத்தை ஒழிக்க நினைக்கிறார்கள்’ - இண்டியா கூட்டணிக்கு பிரதமர் மோடி கண்டனம்!

‘சனாதனத்தை ஒழிக்க நினைக்கிறார்கள்’ - இண்டியா கூட்டணிக்கு பிரதமர் மோடி கண்டனம்!

சனாதனத்தை இண்டியா கூட்டணியினர் ஒழிக்க நினைக்கிறார்கள். சனாதனத்தை ஒழிப்பது என்பது ராஜஸ்தானின் கலாச்சாரத்தை ஒழிப்பதாகும் என பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் கடும் போட்டி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கட்சிகளுக்கு தீவிர ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பாலியில் இன்று நடந்த பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவை 21ம் நூற்றாண்டை நோக்கிக் கொண்டு செல்வதில் ராஜஸ்தான் பங்கு அவசியம். ராஜஸ்தானில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசை வரும் தேர்தலில் மக்கள் தேர்வு செய்ய வேண்டும். சமீபத்தில் சனாதனம் குறித்து காங்கிரசும், இண்டியா கூட்டணிக் கட்சிகளும் கூறியவற்றை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். சனாதனம் என்பது நமது கலாச்சாரம், பாரம்பரியம். சனாதனத்தை இண்டியா கூட்டணியினர் ஒழிக்க நினைக்கிறார்கள். சனாதனத்தை ஒழிப்பது என்பது ராஜஸ்தானின் கலாச்சாரத்தை ஒழிப்பதாகும்.

காங்கிரசுக்கு வாரிசு அரசியல் மட்டும்தான் தெரியும். தன் மக்களின் நலனிலேயே காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கவனமாக உள்ளன. மக்களின் நலன் குறித்து இண்டியா கூட்டணிக்கு அக்கறை இல்லை. ராஜஸ்தானின் அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரபிரதேசம், குஜராத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. அங்கு பெட்ரோல் லிட்டர் 97 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால், ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசு, பெட்ரோலுக்கு கூடுதலாக ரூ.12 வாங்குகிறது. ராஜஸ்தான் மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன். ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.

நிதி ஆயோக்
நிதி ஆயோக்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் நம்பர் 1 மாநிலமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டசபையில் பெண்களை மிகவும் இழிவான வார்த்தைகளால் தரக்குறைவாகப் பேசுகிறார். பெண்களை அவமதிக்கிறார். அவரைக் காங்கிரஸ் கட்சியோ அதன் கூட்டணிக் கட்சிகளோ கண்டிக்கவில்லை. ஆனால், பெண்களுக்கு அதிகாரத்தில் பங்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக மகளிர் இடஒதுக்கீட்டை கொண்டுவந்து சட்டமாக்கினோம்” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in