ஜார்க்கண்ட்டில் பரபரப்பு! பிரதமர் மோடியின் காரை மறித்த பெண்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஜார்க்கண்ட் சென்ற பிரதமர் மோடியின் காரை பெண் ஒருவர் மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் பிரச்சாரம் சூடுப்பிடிக்க தொடங்கி இருக்கிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஜார்க்கண்ட்டில் நடக்கும் போராளி மிர்ஸா முண்டா ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த ஒரு பெண் திடீரென பிரதமர் மோடி சென்ற கார் முன்பாக நின்றார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீஸார் அந்தப் பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினர. பிரதமர் மோடி கான்வாயில் பெண் ஒருவர் குறுக்கே வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in