குண்டு கட்டாகத் தூக்கிச் சென்று வேலூர் இப்ராஹிம் கைது... அனுமதியின்றி பிரசாரம் செய்ததால் அதிரடி!

கைது செய்யப்பட்ட வேலூர் இப்ராஹிம்
கைது செய்யப்பட்ட வேலூர் இப்ராஹிம்

கோவை வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக பாஜக சிறுபான்மை பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிமை போலீஸார் குண்டு கட்டாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை பிரசாரம்
அண்ணாமலை பிரசாரம்

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலையும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக கோவை தொகுதி முழுவதும் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால், தமிழகம் முழுவதும் இருந்து பாஜக நிர்வாகிகள் கோவையில் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் வீதி, வீதியாக பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் இப்ராஹிம்
வேலூர் இப்ராஹிம்

அந்த வகையில், பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராஹிம், கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் நேற்று இரவு பிரசாரம் செய்ய 50-க்கும் மேற்பட்டோருடன் வந்தார். அப்போது அங்கு வந்த போலீஸாரும், பறக்கும் படை அதிகாரிகளும் வேலூர் இப்ராஹிமை தடுத்து நிறுத்தினர். அத்துடன் அனுமதியின்றி பிரசாரம் செய்யக்கூடாது என்று அவரிடம் வலியுறுத்தினர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் அங்கிருந்து செல்வதாக கூறிய வேலூர் இப்ராஹிம், அப்பகுதியில் இருந்த கடைகளுக்குச் சென்று பிரசாரம் செய்தார். இதனால் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக வேலூர் இப்ராஹிம் உள்பட ஆறு பேரை போலீஸார் குண்டு கட்டாக கைது செய்து கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது காவல் துறை வாகனத்தின் முன்பு அமர்ந்து பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in