எம்.பி கைது...ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை பிடி இறுகுகிறது!

சஞ்சய் சிங் எம்.பி கைது
சஞ்சய் சிங் எம்.பி கைது

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியையும்  சேர்க்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. 

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா

டெல்லியில் மதுபானக் கடைகளுக்கு உரிமங்கள் வழங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று 11 மணி நேரம் சோதனை நடத்தியபின் அவரைக் கைது செய்தனர். 

இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே சிறையில் உள்ளார். இதில் வரும்  ஊழல் பணம் ஆம் ஆத்மி கட்சிக்குப் போகிறது என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.

சஞ்சய் சிங் எம்.பி, அமலாக்கத்துறை
சஞ்சய் சிங் எம்.பி, அமலாக்கத்துறை

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில்  இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘‘ஊழல் பணம் ஆம் ஆத்மி கட்சிக்குப் போகிறது என்றால் வழக்கில் அக்கட்சியை சேர்க்காதது ஏன்?’’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியை அந்த வழக்கில் சேர்க்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!

ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!

அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in