தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு... 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் விவரம்; 7 மணி நிலவரம்!

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுப் பெற்றது. 7 மணி நிலவரப்படி தமிழகத்தில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 67.35 % வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 39 மக்களவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்ட 68,321 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், பொதுமக்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து , ஆர்வமுடன் வாக்களித்தனர்.

இந்நிலையில், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. சில வாக்குச்சாவடி மையங்களில் 6 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 7மணி வரையில் தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த மக்கள்.
நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த மக்கள்.

கள்ளக்குறிச்சி - 75.67%,

தர்மபுரி - 75.44%,

சிதம்பரம் - 74.87%,

பெரம்பலூர் - 74.46 %,

நாமக்கல் -74.29 %,

கரூர் - 74.05%,

அரக்கோணம் - 73.92%,

ஆரணி - 73.77%,

சேலம் - 73.55%,

விழுப்புரம் - 73.49%,

திருவண்ணாமலை - 73.35%,

வேலூர் - 73.04%,

காஞ்சிபுரம் - 72.99%,

கிருஷ்ணகிரி - 72.96 %,

கடலூர் - 72.40%,

விருதுநகர் - 72.29%,

பொள்ளாச்சி - 72.22%,

நாகப்பட்டினம் - 72.21%,

திருப்பூர் -72.02 %,

திருவள்ளூர் - 71.87%,

தேனி - 71.74%,

மயிலாடுதுறை - 71.45%,

ஈரோடு - 71.42%,

திண்டுக்கல் - 71.37%,

திருச்சி - 71.20%,

கோவை - 71.17%,

நீலகிரி - 71.07%,

தென்காசி - 71.06%,

சிவகங்கை -71.05%,

தூத்துக்குடி - 70.93%

ராமநாதபுரம் - 71.05%,

திருநெல்வேலி - 70.46%,

கன்னியாகுமரி - 70.15%

தஞ்சாவூர் - 69.82%,

ஸ்ரீபெரும்புதூர் - 69.79 %,

வடசென்னை - 69.26%,

மதுரை - 68.98 %,

தென்சென்னை - 67.82%,

மத்திய சென்னை -67.35 %,

வயதான முதியவர் வாக்களிக்க வந்தபோது...
வயதான முதியவர் வாக்களிக்க வந்தபோது...

7 மணி நிலவரப்படி தமிழகத்தில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 67.35 % வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...


#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in