டெல்லியில் நாளை துறவிகள், புனிதர்கள் மாநாடு... மக்களவை தேர்தலுக்காக பாஜக ஏற்பாடு!

அயோத்தி ராமர் கோயில் - பிரதமர் மோடி
அயோத்தி ராமர் கோயில் - பிரதமர் மோடி

டெல்லியில் மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக வரும் 25-ம் தேதி நடக்க உள்ள நிலையில், துறவிகள், புனிதர்கள் மாநாட்டை, டெல்லியில் பாஜக நாளை நடத்துகிறது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மூன்றாவது முறை முதல்வராக உள்ளார் அர்விந்த் கேஜ்ரிவால். மதுபான ஊழல் வழக்கில் சிக்கி இவருடன் சேர்த்து முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் கைதாகி சிறையில் உள்ளனர். இந்த சூழலில் மக்களவைக்கான டெல்லியின் ஏழு தொகுதிகளில் கடும் போட்டி உருவாகி உள்ளது. 2014, 2019 தேர்தல்களை போல் இவற்றை மீண்டும் பாஜக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல தீவிரம் காட்டுகிறது. அதைச் சாதிக்கும் வகையில் பாஜக டெல்லியில் நாளை துறவிகள், புனிதர்கள் மாநாட்டை நடத்துகிறது.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

இந்த மாநாடானது, இந்து காலண்டரின் புதிய வருடப் பிறப்பு மற்றும் ராமர் கோயில் திறக்கப்பட்டதன் விழாவாக நடத்தப்பட உள்ளது. இதில், சுமார் 31,000 துறவிகளும், 5,000 புனிதர்களும் பங்கேற்க உள்ளனர். இவர்களில் நாடு முழுவதிலும் உள்ள மடாதிபதிகளும், 31 மஹாமண்டலேஷ்வர்களும் இடம் பெற்றுள்ளனர். டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச அரங்கில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் அமைச்சர்கள், எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இது குறித்து டெல்லி மாநில பாஜக தலைவர் வீரேந்தர சச்தேவா கூறும்போது, "கடந்த ஜனவரி 22-ல் பிரதமர் நரேந்திரமோடியால் திறந்து வைக்கப்பட்ட அயோத்தியின் ராமர் கோயில் அடுத்த சில வாரங்களில் 100 நாட்களை எட்ட உள்ளது. இதையும் கொண்டாடும் விதமாக இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில், சனாதன தர்மம் மீதான முக்கியத்துவம் குறித்தும் பலர் உரையாற்றுகின்றனர்" என்றார்.

பாஜகவின் ஆலயங்கள் பிரிவின் அமைப்பாளரான கர்னைல்சிங் கூறுகையில், "இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவரும் ஹனுமர் மந்திரங்களையும் ஓத உள்ளனர். உலகம் முழுவதிலும் கிறித்தவர்கள் தங்கள் புத்தாண்டு தினத்தை கொண்டாடு கின்றனர். அதேபோல் இந்துக்களும் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

பாஜக
பாஜக

டெல்லியின் ஏழு தொகுதிகளிலும் பாஜகவுக்கு எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியுடன் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. இவற்றில், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கடந்த இரண்டு தேர்தல்களிலும் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனைப்போட்டி நிலவியது நினைவுகூரத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

ஆந்திராவில் போட்டியிடும் அமைச்சர் ரோஜா திருத்தணியில் மகனுடன் மனமுருக வழிபாடு... வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in