பிரச்சாரத்துக்கு இடையே பிரசவம் பார்த்த தெலுங்கு தேசம் பெண் வேட்பாளர்... கர்ப்பிணி தாயையும், சேயையும் காப்பாற்றி நெகிழ்ச்சி !

கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கோட்டிபதி லட்சுமி
கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கோட்டிபதி லட்சுமி

ஆந்திராவில் தெலுங்கு தேசம் வேட்பாளரும், மருத்துவருமான கோட்டிபதி லட்சுமி, பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு கர்ப்பிணிக்கு சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் தாயும், சேயும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஓர் அணியாகவும், பாஜக, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆகியவை ஓர் அணியாகவும், தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்தும் போட்டியிடுகின்றன.

கோட்டிபதி லட்சுமி
கோட்டிபதி லட்சுமி

இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள தர்ஷி சட்டப் பேரவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) சார்பில் வேட்பாளராக போட்டியிடுபவர் கோட்டிபதி லட்சுமி. இவர் பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட்டையைச் சேர்ந்தவர். தேர்தல் நெருங்கியுள்ளதை முன்னிட்டு, கோட்டிபதி லட்சுமி கடந்த சிலநாள்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தர்ஷி மண்டலம் அப்பாயி பாலேம் பகுதியைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண் தர்ஷியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அம்மருத்துவமனையில் மகளிர் மருத்துவ நிபுணர் இல்லாத நிலையில் கர்ப்பிணியின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால்,அவரை ஒங்கோல் அல்லது குண்டூருக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்கும் மருத்துவர் கோட்டிபதி லட்சுமி
குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்கும் மருத்துவர் கோட்டிபதி லட்சுமி

இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினர், இந்த விஷயத்தை தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரும், புகழ்பெற்ற மகளிர் மருத்துவ நிபுணருமான டாக்டர் கோட்டிபதி லட்சுமியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவர் அப்பகுதியில் பிரச்சாரம் செய்து வந்ததை உடனடியாக ரத்து செய்துவிட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவசர அறுவை சிகிச்சை செய்தார். இதில் அந்த கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

மருத்துவர் கோட்டிபதி லட்சுமி சரியான நேரத்துக்கு வந்து மருத்துவம் பார்த்ததால் இரு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஇந்நிலையில் மருத்துவர் கோட்டிபதி லட்சுமிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கோட்டிபதி லட்சுமியின் தந்தை கோட்டிபதி நரசையா, தாத்தா கோட்டிபதி ஹனுமந்த ராவ் ஆகியோர் எம்எல்ஏ-க்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in