தெலங்கானா பணக்கார வேட்பாளர்கள் பட்டியல்… காங்கிரஸ் வேட்பாளர் முதலிடம்!

தெலங்கானா பணக்கார வேட்பாளர்கள்
தெலங்கானா பணக்கார வேட்பாளர்கள்

தெலங்கானா மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியாகி பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடு தயாராகி வரும் நிலையில், அதற்கான முன்னோட்டமாக 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்த நிலையில், சத்தீஷ்கர் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் அன்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 17ம் தேதி நடக்க இருக்கிறது. அதேபோல் மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23ம் தேதியும், தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.

ராகுல் காந்தி, சந்திரசேகர் ராவ்
ராகுல் காந்தி, சந்திரசேகர் ராவ்

தெலங்கானா மாநிலத்தில் ஆளும் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி ஆட்சியில் உள்ளது. மாநில முதல்வராக சந்திரசேகர ராவ் உள்ளார். அம்மாநில தேர்தலுக்கான பிரசாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இருந்தபோதும் காங்கிரஸ், பி.ஆர்.எஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மொத்தமாக 4798 வேட்பாளர்கள் தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நவம்பர் 13ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனையும், மனுக்களை வாபஸ் பெற 15ம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு தற்போது அங்கு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் விவேக் வெங்கடசாமி
காங்கிரஸ் வேட்பாளர் விவேக் வெங்கடசாமி

சென்னூர் காங்கிரஸ் வேட்பாளர் விவேக் வெங்கடசாமி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகப்பெரிய பணக்காரராக அறியப்படுகிறார். அவருக்கு மொத்தமாக ரூ. 606.66 கோடிக்கு சொத்துமதிப்பு உள்ளது. அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் கிட்டத்தட்ட ரூ.41.5 கோடி கடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னால் பாஜக எம்.பி.யான விவேக் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி
காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி

அதே காங்கிரஸ் கட்சியைச் சேட்ந்த ஸ்ரீனிவாஸ் ரெட்டி இரண்டாம் இடத்தில் உள்ளார். அவருக்கு ரூ.460 கோடி சொத்துமதிப்பு உள்ளது. பாலையார் தொகுதியில் போட்டியிடும் ஸ்ரீனிவாச ரெட்டிக்கு ரூ.44 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் நாளான நவம்பர் 9ம் தேதி ஸ்ரீனிவாச ரெட்டி வீடுகளில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. முதலில் பிஆர்எஸ் கட்சியில் இருந்த ஸ்ரீனிவாச ரெட்டி, சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக அக்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு பின் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு வேட்பாளர் ராஜ் கோபால் ரெட்டிக்கு ரூ.459 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஆர்எஸ் கட்சியின் வேட்பாளர் பைலா சேகர் ரெட்டி தனக்கு 227 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவருக்கு 83 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!

தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!

ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!

பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!

அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in