தமிழ்நாட்டில் முதல்முறையாக பாஜக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான சி.வேலாயுதன் காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1996-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வேலாயுதம் 27,443 வாக்குகள் பெற்று 4,540 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல் முதலாக பாஜக சார்பில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
அதன் பின்னர் 2001, 2006 ஆகிய தேர்தல்களில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் வேலாயுதன். முன்னதாக அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். எம்எல்ஏ-வாக பொறுப்பு வகித்த போது, ராமர் கோயில் கட்ட கையெழுத்து இயக்கத்தை நடத்தினார். கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவு காரணமாக அவர் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மாநில பாஜக சார்பிலும் எக்ஸ் தளத்தில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவரது மறைவை அடுத்து கன்னியாகுமரியில் இன்று பாஜக சார்பில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பாஜகவினர் வேலாயுதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதே போல் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் வேலாயுதன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!
பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!
உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்
பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!
பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!