பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

ரேவண்ணா
ரேவண்ணா

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள கர்நாடக எம்எல்ஏ ரேவண்ணாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகன் பிரஜ்வல் ரேவண்ணாவுடன், ரேவண்ணா
மகன் பிரஜ்வல் ரேவண்ணாவுடன், ரேவண்ணா

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏவுமான ரேவண்ணா மீது அவரது வீட்டு பணிப்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் மற்றும் எச்.டி. ரேவண்ணாவின் மகனான பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிரான ஆபாச வீடியோ வழக்கு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  எம்.பி.யான அவர், தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் ஹாசன் தொகுதி வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.

ரேவண்ணா
ரேவண்ணா

பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு  பிரஜ்வல் தப்பிச் சென்று விட்டார். பல பெண்களைக் கட்டாயப்படுத்தி அல்லது அவர்களின் ஒப்புதல் இல்லாமல் ஆபாச வீடியோக்கள் இவரால் எடுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்நிலையில்,  ரேவண்ணா வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவர், ஹோலேநரசிப்பூர் தொகுதியின் எம்எல்ஏவான எச்.டி. ரேவண்ணா 2019 முதல் 2022 வரையிலான 3 ஆண்டுகளில் பல முறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டை கூறி  பரபரப்பை ஏற்படுத்தினார்.

2019-ல் வேலைக்கு சேர்ந்த 4-வது மாதத்தில் இருந்து ரேவண்ணா அடிக்கடி தன்னை அவருடைய வீட்டுக்கு கூப்பிட்டார்.   ரேவண்ணாவின் மனைவி எப்போதெல்லாம் வீட்டில் இல்லாத நேரங்களில் தன்னை சேமிப்பு அறைக்கு அழைத்துச் சென்று சென்று  சேலை உள்ளிட்ட ஆடைகளைக் களைந்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில், 354ஏ, 354டி, 506 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.  தற்போது சிறப்பு விசாரணைக் குழுவின் காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். தன் மீதான  புகாரில் உண்மை  எதுவும் இல்லை. இது ஒரு பெரிய அரசியல் சதி. தனக்கு எதிராக சதித் திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளது என்று ரேவண்ணா  இது குறித்து கூறியுள்ளார். 

இந்நிலையில், ரேவண்ணாவுக்கு நேற்று மாலை  திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு  அவர் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அவரை  பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய முக்கிய உறுப்புகள் சீராக இருக்கின்றன எனத் தெரிவித்தனர்.  அதன்பின்னர், சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகளுடன் அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in