வெள்ளி, திங்களில் தேர்தல் வைக்காதீங்க... தேர்தல் ஆணையத்துக்கு தமிழிசை திடீர் கோரிக்கை!

தேர்தல் அதிகாரியுடன் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை
தேர்தல் அதிகாரியுடன் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை

”வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் தேர்தல் வைத்தால் தொடர் விடுப்பு எடுத்துக் கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வருவதில்லை” என தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களின் பெயர்கள் கொத்து கொத்தாக நீக்கப்பட்டு இருப்பதாக பாஜக சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கோவையில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், இன்று காலை தென் சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரும் இதே குற்றச்சாட்டை அப்போது முன்வைத்தார்.

வாக்கை பதிவு செய்யும் முன்பு கடவுளை மனமுருக வேண்டிய தமிழிசை
வாக்கை பதிவு செய்யும் முன்பு கடவுளை மனமுருக வேண்டிய தமிழிசை

”தென் சென்னை தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களிலும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ள வாக்கு செலுத்துவதற்கு முயற்சி செய்தனர். இருப்பினும் பாஜகவினர் இது தொடர்பாக போலீஸ் கண்காணிப்பாளர்களிடம் தகவல் அளித்து அதனை முறியடித்து இருக்கிறோம். தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களிலும் கொத்துக்கொத்தாக வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் தமிழிசை.

வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல்

தொடர்ந்து பேசிய அவர், ”வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் தேர்தல் நடத்தினால் பிந்தைய மற்றும் முந்தைய நாட்களில் தொடர் விடுப்பு எடுத்துக் கொண்டு மக்கள் வாக்களிக்க வருவதில்லை. எனவே, தேர்தலை புதன், வியாழன் போன்ற நாட்களில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு 100% வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், அதற்கு பதிலாக வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்களிக்க வருபவர்களுக்கு பெயர் இல்லை என்றால் அவர்கள் எப்படி வாக்களிக்க முடியும்? மேலும் சேலஞ்ச் ஓட்டு, டெண்டர் ஓட்டு போன்றவை குறித்து போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. அதையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

ஆந்திராவில் போட்டியிடும் அமைச்சர் ரோஜா திருத்தணியில் மகனுடன் மனமுருக வழிபாடு... வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in