நேற்று வரை ஆளுநராக இருந்தவர் இன்று உங்கள் அக்கா என்கிறார்... தமிழிசையை தாக்கிய தமிழச்சி!

தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்

“நேற்று வரை ஆளுநராக இருந்துவிட்டு திடீரென்று, ‘நான் உங்கள் அக்காவாக வந்து இருக்கிறேன்’ என கூறுபவரிடம் நான் என்ன சொல்வது” என தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்

நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த இடத்தில் தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். இது இரண்டு கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழச்சி தங்கபாண்டியன் மயிலை கிழக்குப் பகுதியில் இருந்து இன்று இரண்டாவது நாள் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,” நேற்று சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் பிரச்சாரத்தை தொடங்கினோம். செல்லும் இடங்கள் எல்லாம் குடும்பத் தலைவிகள், பெண்கள் உற்சாகமாக வரவேற்கிறார்கள். நேற்று வேட்பாளர் பணிமனை கட்டிடம் திறக்கும் பொழுது தடுமாறி கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மூன்று வாரம் ஓய்வெடுக்கச் சொல்லி இருந்தார்கள் ஆனாலும் தேர்தல் நேரம் என்பதால் ஓய்வு எடுக்காமல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டுள்ளேன்” என்றார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்தான கேள்விக்கு பதிலளித்த தமிழச்சி தங்கப்பாண்டியன், “புலப்படாத ஆளுநராக இருந்தவர் தான் தமிழிசை சவுந்தரராஜன். தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்ய தேவை இல்லை. நேற்று வரை ஆளுநராக இருந்துவிட்டு திடீரென்று வந்து, ’நான் உங்கள் அக்காவாக வந்திருக்கிறேன்’ என்று சொல்பவரை நான் என்ன சொல்வது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!

அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in