3 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?- தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தமிழக அரசு தொடர்ந்து வழக்கில் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் மோதல் போக்கு நடந்து வருகிறது. தமிழக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு அவர் உடனே ஒப்புதல் வழங்குவதில்லை. பல்வேறு விளக்கங்கள் பெற்று அதன் அடிப்படையில்தான் ஒப்புதல் வழங்கி வருகிறார். அதே போல் சட்ட மசோதாக்களுக்கும் உடனே ஒப்புதல் வழங்குவது இல்லை. இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்ட காலமாக ஒப்புதல் கொடுக்காமல், கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

இதையடுத்து தமிழக அரசு, ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இன்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் இன்று நடைபெற்றது. தமிழக ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கின் மீதான விசாரணையை மீண்டும் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. தமிழக அரசு ரிட் மனு மீதான விசாரணையை நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர்
தமிழக முதல்வர்

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடந்துள்ளது. தமிழக அரசு சார்பில் வாதிட்டபோது, சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு மீண்டும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலவரையறை நிர்ணயிக்க வேண்டும். அரசை நிர்வகிக்க வேண்டும், ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தை அணுக முடியாது எனவும் கூறியது.

இந்நிலையில், ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். "2020 ஜனவரியில் இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in