விவிபாட்
விவிபாட்

விவிபாட் சீட்டு விவகாரம்.... தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து விவிபாட் சீட்டுகளையும் முழுமையாக எண்ணக் கோரிய மனு மீது தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம்  நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தல்  ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி  ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக  வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் விவிபேட் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டுமே சரிபார்க்கும் நடைமுறைக்கு மாறாக, தேர்தலில் அனைத்து  விவிபேட் சீட்டுகளையும்  முழுமையாகக் கணக்கிடக் கோரிய மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதற்கு முன்பு ஏப்ரல் 8, 2019 அன்று, ஒரு மக்களவைத் தொகுதியில் ஒரு சட்டமன்றப் பகுதிக்கு  சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரங்களின் எண்ணிக்கையை ஒன்றிலிருந்து 5 ஆக அதிகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

முன்னதாக ஏப்ரல் 8, 2019 அன்று, ஒரு மக்களவைத் தொகுதியில் ஒரு சட்டமன்றப் பகுதிக்கு  சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரங்களின் எண்ணிக்கையை ஒன்றிலிருந்து 5 ஆக அதிகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

விவிபாட்  காகிதச் சீட்டுகள் மூலம் தற்செயலாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகளை மட்டும் சரிபார்ப்பதற்கு மாறாக, தேர்தலில் விவிபாட் சீட்டுகளை முழுமையாகக் கணக்கிடக் கோரி ஆர்வலர் அருண் குமார் அகர்வால் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், வழக்கறிஞர் நேஹா ரதி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். 

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரே நேரத்தில் சரிபார்ப்பு செய்யப்பட்டு, அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகளை நியமித்தால், ஐந்து முதல் ஆறு மணி நேரத்தில் முழுமையான விவிபாட் சரிபார்ப்பை மேற்கொள்ள முடியும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அனைத்து விவிபாட் சீட்டுகளையும் எண்ணக்கோரிய இந்த மனு மீது பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in