ஜனநாயகத்தை வலுப்படுத்தியவர்; பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் மன்மோகன் சிங் - பிரதமர் மோடி புகழாரம்!

மன்மோகன் சிங், மோடி
மன்மோகன் சிங், மோடி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர். தனது கடமைகளை சிறப்புற நிறைவேற்றியவர். நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 68 பேரின் பதவிக்காலம் பிப்ரவரி - மே 2024 இடையே நிறைவடைகிறது. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் புதிய அரசு பதவியேற்ற பிறகுதான் நடைபெறும் என்பதால், பதவிக்காலம் நிறைவடைய உள்ள உறுப்பினர்களுக்கான பிரிவு உபச்சார உரை மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது.

மோடி
மோடி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெற்றதை முன்னிட்டு மாநிலங்களவையில் பிரிவுபசார உரையில் பிரதமர் மோடி பேசியதாவது: மன்மோகன் சிங்கின் பணிகளை இன்று நினைவுகூர விரும்புகிறேன். அவரது பங்களிப்பு அளப்பரியது. நீண்ட காலம், இந்த அவையையும், நாட்டையும் அவர் வழிநடத்திய விதம் மறக்க முடியாது. அவர் நம்மை தொடர்ந்து வழிநடத்த பிரார்த்தனை செய்கிறேன்.

ஜனநாயகத்தை வலுப்படுத்தியவர் மன்மோகன் சிங். நாடாளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பு ஒன்றில், ஆட்சியாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தெரிந்தும், மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். ஒரு உறுப்பினர் தனது கடமையை எப்போதும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்பவர்.

மோடி, மன்மோகன் சிங்
மோடி, மன்மோகன் சிங்

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர். தனது கடமைகளை சிறப்புற நிறைவேற்றியவர். நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது. நமது நாட்டின் ஜனநாயகம் குறித்த பேச்சு எங்கெல்லாம் எழுகிறதோ அங்கெல்லாம், நினைவுகூறப்படும் உயர்ந்த மனிதர்களில் ஒருவராக அவர் இருப்பார்” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாராட்டியதற்காக மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமருக்கு பாராட்டு தெரிவித்தார். “நாம் இப்படித்தான் முன்னேறிச் செல்ல வேண்டும். நல்லதை பாராட்ட வேண்டும். குறைகளை மனதில் கொள்ள வேண்டும்” என மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

அத்தை மகளை/மகனை திருமணம் செய்தால் தண்டனை... சர்ச்சையானது பொது சிவில் சட்டம்!

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தகவல்!

அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது...கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்!

நாளை தை அமாவாசை: பூக்களின் விலை கடும் உயர்வு... 1 கிலோ மல்லி ரூ.2,000/-க்கு விற்பனை!

அண்ணாமலை அவதூறு பேச்சு... உயர் நீதின்றம் அதிரடி உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in