மகளுடன் தமிழகம் வரும் சோனியா காந்தி: சென்னையில் ஒன்றுகூடும் இந்தியா கூட்டணி மகளிர் அணிகள்

சோனியா காந்தியுடன் பிரியங்கா காந்தி
சோனியா காந்தியுடன் பிரியங்கா காந்தி

திமுக மகளிர் அணி சார்பில் நாளை நடைபெற உள்ள மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்ள  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும்,  அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று இரவு சென்னை வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அவர் பிறந்த தினமான ஜூன் 3ம்தேதி முதல் இந்த ஆண்டு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி தி.மு.க. சார்பிலும், அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது.

தி.மு.க.வின் ஒவ்வொரு அணிகளின் சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் இப்போது தி.மு.க. மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னையில் நாளை நடைபெறுகிறது. தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னின்று நடத்தும் இந்த 'மகளிர் உரிமை மாநாடு' நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள பிரபலமான மகளிர் தலைவர்களை இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கனிமொழி அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த அழைப்பை ஏற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,  காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி,  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, பீகார் மாநில உணவுத்துறை அமைச்சர் மற்றும் ஐக்கிய ஜனதாதள தேசிய நிர்வாக குழு உறுப்பினர் லெஷி சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆனிராஜா, திரிணமூல் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், ஆம் ஆத்மி கட்சி தேசிய செயல் உறுப்பினரான டெல்லி சட்டசபை துணை சபாநாயகர் ராக்கி பிட்லன் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பெண் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

சோனியா காந்தியுடன் பிரியங்கா காந்தி
சோனியா காந்தியுடன் பிரியங்கா காந்தி

இதற்காக இன்று இரவு சென்னை விமான நிலையம் வருகை தரும் சோனியா காந்தி,  பிரியங்கா காந்தி ஆகியோரை காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி தலைமையில் சிறப்பான முறையில் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் பின்னர் நட்சத்திர விடுதியில் தங்கும் அவர்கள் நாளை திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை சந்திக்கின்றனர். அப்போது நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...

நாளை மகாளய பட்ச அமாவாசை: இந்த விஷயங்களை மறக்காதீங்க!

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள்  அதிர்ச்சி!

இந்த வருஷம் கேம்பஸ் இன்டர்வியூ கிடையாது.. பிரபல ஐடி நிறுவனம் அறிவிப்பு!

செம மாஸ் அறிவிப்பு... இன்று மெட்ரோ ரயிலில் பயணிக்க கட்டணம் கிடையாது!

மனைவி தற்கொலை... விரக்தியில் உயிரையிழந்த கணவர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in