திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமா... நாசூக்காக நழுவிய செல்வப்பெருந்தகை!

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமா... நாசூக்காக நழுவிய செல்வப்பெருந்தகை!

சுங்கச்சாவடிகளை அகற்றுவது, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது என திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் சொல்லி இருக்கிறது. இதெல்லாம் எப்படி சாத்தியமாகும் என எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்துவரும் நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந் தகையிடம் இதெல்லாம் சாத்தியமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவரும் மலுப்பலாகவே பதில் அளித்தார்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தேர்தல் பணி ஒழுங்கினைப்பு குழு பொறுப்பாளர்களின் பெயர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, “முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர், கிருஷ்ணசாமி ஆகியோரை தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமித்திருக்கிறேன். பிரச்சார குழு தலைவராக கே.எஸ்.அழகிரி, துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் கே.எஸ். சுதர்சனன், விளம்பர குழு தலைவராக திருநாவுக்கரசர், தகவல் தொடர்பு குழுத் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி

தொடர்ச்சியாக எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பாஜகவினர் தங்கள் பக்கம் இழுக்கின்றனர். பாஜகவில் சேர்ந்ததும் அவர்கள் கங்கை காவிரியில் குளித்தது போல் புனிதமாகிவிடுகிறார்கள். நவீன் ஜிண்டால் பாஜகவில் இணைந்த உடன் பாஜக மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை மிரட்டுவது தான் அவர்களின் வேலையாக உள்ளது. இந்தியா கூட்டணியில் வெறுப்பு அரசியல் இல்லை, அன்பு அரசியல் தான் செய்கிறோம்” என்றார் .

தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கியாஸ் விலை குறைப்பு உள்ளிட்ட திமுக அளித்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமா... காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் அதையெல்லாம் நிறைவேற்றுமா என செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் சொன்ன செல்வப்பெருந்தகை, ”இந்தியா கூட்டணி கொடுத்த வாக்குறுதி நிச்சயமாக நிறைவேற்றப்படும். காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும்” என்றார். ஆனால், திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது சாத்தியமா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் நாசூக்காக நழுவிச் சென்றுவிட்டார் செல்வப்பெருந்தகை.

இதையும் வாசிக்கலாமே...

தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!

அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in