சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் நடுவில் ஆடு போல மாட்டி முழிக்கிறார்... அண்ணாமலையை கலாய்த்த செல்லூர் ராஜூ!

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

"சிங்கத்திற்கும் சிறுத்தைக்கும் இடையே மாட்டிக் கொண்ட ஆட்டுக் குட்டியாக அண்ணாமலை, தமிழக அரசியலில் பிதற்றிக் கொண்டு இருக்கிறார்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

மதுரையில் அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பொதுமக்களிடையே வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதுரைக்கு எந்த ஒரு முக்கியமான திட்டங்களையும் எம்.பி ஆக இருந்த சு.வெங்கடேசன் கொண்டுவரவில்லை. அவர் எப்போது பார்த்தாலும் கீழடி என்றுதான் பேசுகிறார். ஆனால் கீழடியே அதிமுக கொண்டு வந்த திட்டம்தான். ஆனால், ஏதோ தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் போல சு.வெங்கடேசன் பேசி வருகிறார். ஒன்றும் கதைக்கு உதவவில்லை, செல்ப்பும் எடுக்க வில்லை. மதுரைக்கு அதிமுக கொண்டு வந்த பல திட்டங்களை, திமுக தற்போது நடைமுறைக்கு கொண்டு வருகிறது. ஆனால், அவர்களே அந்த திட்டத்தை கொண்டு வந்தமாதிரி நடந்துக் கொள்கிறார். சு.வெங்கடேசன் முதலில் நல்ல கதை எழுதினார். தற்போது நல்ல கதை விடுகிறார். அதில் சரக்கும் இல்லை. முறுக்கும் இல்லை.

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழகத்தில் நன்றாக மாட்டிக்கொண்ட ஆடாக அண்ணாமலை இருக்கிறார். ஒரு பக்கம் சிங்கம், ஒரு பக்கம் சிறுத்தை, இந்த சிறுத்தைக்கும் சிங்கத்திற்கும் இடையே மாட்டிக் கொண்ட ஆட்டுக்குட்டியாக இருக்கிறார். என்ன பேசுகின்றோம் என்பது தெரியாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார். எம்ஜிஆர் திரைப் படத்தை பாருங்கள். நம்பியார், பிஎஸ் வீரப்பா, மனோகர் ஆகியோரைத்தான் வில்லனாக போடுவார். எங்களுக்கு மனோகரனாக, பி.எஸ் வீரப்பாவாக இருப்பவர்கள் திமுக தான். மற்றவர்கள் எல்லாம் ஜுஜுப்பி. மதுரை ஆன்மீக பூமி என்பதால் இந்துகளின் வாக்குகளை வாங்கலாம் என்று பாஜகவினர் நினைக்கின்றனர். அந்த கதை எல்லாம் இங்கு எடுபடாது.

தமிழகம் முழுவதும் பாஜகவை செயற்கையாக முன்னிலைப்படுத்துகிறார்கள். குறிப்பாக விளம்பரம் எல்லாம் பயங்கரமாக இருக்கிறது. பொதுவாக டிரைலர் நன்றாக இருக்கும். படம் சொதப்பி விடும். அந்த வகையில் தான் பாஜகவினுடைய ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது. ஆனால் ரிசல்ட் என்னவோ பிளாப்தான். அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வட கோடியில் இருக்கும் பிரதமர் மோடிக்கு, தென்கோடியில் இருப்பவர்களின் பற்றி என்ன தெரியும். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுக்காக பிரதமராக இருக்கிறவர் மோடி. இந்த 10 ஆண்டுகளில் காமராஜர் ஆட்சியையோ, எம்ஜிஆர் ஆட்சியையோ ஏன் கொடுக்கவில்லை. தற்போது வரை எதையும் கொடுக்காமல், இனிமேல் எப்படி கொடுப்பார்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

எங்களிடம் எப்படி இருந்த ஓபிஎஸ், இப்போது பலாப்பழத்தை தூக்கிக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். மனசாட்சியே இல்லாமல் ஒரு எம்.பி பதவிக்காக தன்மானம் ரோஷம் எல்லாத்தையும் விட்டுவிட்டு ஓபிஎஸ் தேர்தலில் நிற்கிறார். ஜெயலலிதா,அண்ணா,பெரியாரை பற்றி இழிவாக பேசிய அண்ணாமலை உடன் கைகூப்பி நின்று எப்படி மக்களிடம் வாக்கு கேட்க முடிகிறது" என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in