மேற்கு வங்கத்திலும் சுமுகம்... இந்தியா கூட்டணியில் மம்தா!

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட சிக்கல்கள் ஒவ்வொன்றாக தீர்ந்து வரும் நிலையில் மேற்கு வங்கத்திலும் காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் இடையே சுமுகமான தீர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சோனியா காந்தி
சோனியா காந்தி

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக இந்திய அளவில் 28 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கியது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் உட்பட ஒரு சில கட்சிகள் இந்தியா கூட்டணியை விட்டு விலகி விட்டன. இந்நிலையில் இருக்கும் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு சிக்கல்கள் எழுந்தன.

மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதிகள் ஒதுக்கீடு பேச்சுவார்த்தை மிகுந்த சிக்கலாக மாறியதால் அங்குள்ள மாநில கட்சிகள் தாங்கள் தனியாகவே போட்டியிடப் போவதாக அறிவித்தன.

இதனால் வட மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கான வெற்றி சிதைந்து போகும் அபாயம் ஏற்பட்டது. இதை உணர்ந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் தற்போது நேரடியாக களம் இறங்கி குறிப்பிட்ட மாநிலங்களில் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்த்து வருகின்றனர்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

அதன்படி உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதிக்கு உடன்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் பெரும் சர்ச்சைக்குரிய மாநிலமாக இருந்த மேற்கு வங்கத்திலும் தற்போது சோனியா காந்தி தலையிட்டதால்  சுமுகமாக  உடன்பாடு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில்  மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 37 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக இரண்டு தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு தர முடியும் என்று மம்தா பானர்ஜி என்று உறுதியாக கூறியிருந்தார். 

இந்தநிலையில்  சோனியா காந்தி, மம்தாவிடம் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி தற்போது 5 தொகுதிகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாநிலத்திலும் இந்தியா கூட்டணியில் சுமுகம் ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


நாளை மாசி மகம்: இல்லத்தில் தனம் பெருக இதை தானம் பண்ணுங்க!

விடாது துரத்திய விபத்து... தெலங்கானாவில் பெண் எம்எல்ஏ பலி!

அதிகாலையில் அதிர்ச்சி... முன்னாள் முதல்வர் காலமானார்!

லாட்டரியில் ரூ.1,00,00,000 பரிசு... பழநிக்கு பாதயாத்திரை சென்ற கேரள பக்தருக்கு அதிர்ஷ்டம்!

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in