‘காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது வேஸ்ட்... மாறாக பாஜக-வை பாருங்கள்’ -சஞ்சய் நிருபம் கோரிக்கை

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது சஞ்சய் நிருபம்
காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது சஞ்சய் நிருபம்

அண்மையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சஞ்சய் நிருபம், “காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது வீண்; மாறாக பாஜகவுக்கு வாய்ப்பளியுங்கள்” என பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, காங்கிரஸ் கட்சியிலிருந்து 6 வருடங்களுக்கு நீக்கம் செய்யப்பட்டார் சஞ்சய் நிருபம். மும்பை உட்பட மகாராஷ்டிர மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, காங்கிரஸின் கூட்டணியில் இருந்த உத்தவ் தாக்கரே தனது சிவசேனா கட்சியினருக்காக தன்னிச்சையாக அறிவித்ததாக புகார் எழுந்திருந்தது. அவ்வாறு அறிவிப்பான தொகுதிகளில் சஞ்சய் நிருபமின் விருப்பத்துக்குரிய வடமேற்கு மும்பையும் ஒன்று.

ராகுல் காந்தியுடன் சஞ்சய் நிருபம்
ராகுல் காந்தியுடன் சஞ்சய் நிருபம்

இதனால் கொதிப்படைந்த சஞ்சய் நிருபம், “உத்தவ் தாக்கரே தன்னிச்சையாக தனது கட்சியினருக்கான 17 வேட்பாளர்களை அறிவிருத்திருக்கக் கூடாது. இது காங்கிரஸ் கட்சியை ஒழிக்கும் சதி” என்று சீறியிருந்தார். தலைமையின் அனுமதியின்றி கூட்டணித் தலைவர் மீது சஞ்சய் நிருபம் பாய்ந்ததற்காக, அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அதன்படி கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு அவர் நீக்கப்படுவதாக அறிவித்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே தான் காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்துவிட்டதாக சஞ்சய் நிருபம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இன்றைய தினம் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் தற்போது வாய்ஸ் தந்திருக்கிறார். “காங்கிரஸுக்கு வாக்களித்து அந்த வாக்கை வீணாக்க வேண்டாம். பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி பாரம்பரிய பழைய கட்டிடம் போன்றது. அதில் தங்குவதற்கு மதிப்பு இல்லை. வயதான மற்றும் சோர்வான தலைவர்கள் அந்த கட்டிடத்தை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்களால் காங்கிரஸ் கட்சியையோ, நாட்டின் நிலைமையை மாற்ற முடியாது” என்று சஞ்சய் நிருபம் இன்று பேட்டியளித்துள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் 5 அதிகார மையங்கள் குறித்து சஞ்சய் நிருபம் வெளியிட்ட தகவல் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் என 5 அதிகார மையங்கள் மற்றும் அதையொட்டிய குழப்பங்களை சஞ்சய் நிருபம் விவரித்து இருந்தது சர்ச்சையை கிளப்பியது.

இதையும் வாசிக்கலாமே...


#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in