அதகளமாகும் அயோத்தி... மோடிக்கு போட்டியாக ரோடு ஷோ நடத்தும் அகிலேஷ் யாதவ்!

அதகளமாகும் அயோத்தி... மோடிக்கு போட்டியாக ரோடு ஷோ நடத்தும் அகிலேஷ் யாதவ்!

மக்களவை தேர்தலில் உபியில் ராமர் கோயில் மீதான விவாதம் சூடு பிடிக்கத் துவங்கி உள்ளது. இங்கு பாஜகவுக்கு இணையாக சமாஜ்வாதி பிரச்சார ஊர்வலம் நடத்த தயாராகிறது.

பல ஆண்டுகளாக அயோத்தியில் பாபர் மசூதி-ராமர் கோயில் மீதான வழக்கு நடைபெற்றது. இறுதியில் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நவம்பர் 19, 2019ல் வெளியானது. இதில், பிரச்சினைக்குரிய இடம் இந்து தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டு அங்கு ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதன் தரைத்தளம் கடந்த ஜனவரி 22ல் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

இதற்கு முன்பு வரை அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டப்படும் உறுதிமொழியை பாஜக அளித்து வந்தது. இது, பாஜகவின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் தவறாமல் இடம் பெற்றது. தற்போது அங்கு கோயில் கட்டப்பட்ட நிலையில் அதன் பலனை பாஜக மக்களவை தேர்தலில் பெற முயலும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்தமுறை 7 கட்ட தேர்தலில் மூன்று கட்டங்கள் முடிந்தும், கோயில் விவகாரம் இன்னும் பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை. இனிவரும் 4 கட்ட தேர்தலில் ராமர் கோயில் மீதான விவாதம் பிரச்சாரங்களில் முக்கிய இடம்பெறத் துவங்கி விட்டது. அயோத்தியில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற ரோடு ஷோ கடந்த மே 5-ல் நடைபெற்றது. சுமார் இரண்டு கி.மீ தொலைவிற்கு பிரம்மாண்டமான வகையில் இந்த ஊர்வலம் இருந்தது.

இதை மிஞ்சும் வகையில் இந்தியா கூட்டணி கட்சிகளும் ஒரு ரோடு ஷோவை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதை மே 18-ம் தேதிக்கு முன்பாக நடத்த சமாஜ்வாதி தயாராகிறது. இதில் பங்கேற்கும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் தங்கள் மீது பாஜக முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உத்தர பிரதேச மாநிலத்தில் பெருவாரியான இடங்களை வெல்வதற்காக சமாஜ்வாதி இந்த ஷோவை நடத்துகிறது.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

இந்த ஊர்வலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதியின் அகிலேஷ் சிங் யாதவ், அவரது மனைவியான டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இது குறித்து காமதேனு டிஜிட்டலிடம் பேசிய அயோத்யாவின் சமாஜ்வாதி மாவட்ட தலைவரான பாரஸ்நாத் யாதவ், ”பாஜக இங்கு செய்யும் பிரச்சாரங்களில் அவர்கள் அல்லாத ஆட்சி அமைந்தால், ராமர் கோயில் மருத்துவமனையாக மாற்றப்பட்டு விடும் என தவறானத் தகவல்கள் வெளியாகின்றன. நடந்து முடிந்த 3 கட்ட தேர்தல்களில் மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க முன்வராததை அக்கட்சி உணர்ந்திருப்பதையே இது காட்டுகிறது.

பாஜகவின் புகாருக்கு பதிலளிக்க வேண்டியது மிகவும் அவசியம். இதற்காக சமாஜ்வாதி சார்பில் காங்கிரஸ் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதன் பலன் அருகிலுள்ள அமேதி, ரேபரேலியிலும் கிடைக்கும்.” எனத் தெரிவித்தார்.

ராமர் கோயிலில் மோடி
ராமர் கோயிலில் மோடி

இதனிடையே, உபி.,யின் சம்பல் தொகுதியில் துறவியான பாஜக தலைவர் பிரமோத் கிருஷ்ணாம், தனது பிரச்சாரங்களில், ”ராமர் கோயில் மீதான தீர்ப்பு வெளியான பின் ராகுல், காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாற்றி அமைக்கலாம் எனத் தெரிவித்தார். இவர்கள் ஆட்சியில் உச்ச நீதிமன்றத்தின் ஷாபானு வழக்கின் தீர்ப்பை மாற்றும் விதமாக 1986ல் சட்டம் இயற்றி இருந்தனர்” எனக் கூறி வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு வரை காங்கிரஸின் முக்கியத் தலைவராக இருந்தவர் ஆவார்.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

5-ம் கட்ட தேர்தலில், அயோத்தியில் மே 20-ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அயோத்தியை உள்ளடக்கிய பைஸாபாத் தொகுதியில் பாஜக சார்பில் லல்லு சிங் போட்டியிடுகிறார். இவர், 2014, 2019 மக்களவை தேர்தலில் பாஜகவில் போட்டியிட்டு வென்றவர். இதற்கு முன் லல்லு சிங், 1991 முதல் 2007ம் ஆண்டுகளில் அயோத்தியின் எம்எல்ஏ-வாகவும் இருந்தவர். லுல்லு சிங்கை எதிர்த்து சமாஜ்வாதியில் அயோத்தியின் மில்கிபூர் எம்எல்ஏ-வான அவ்தேஷ் போட்டியிடுகிறார். பட்டியலினத்தைச் சேர்ந்த அவ்தேஷ், பைஸாபாத் சட்டப்பேரவை தொகுதியில் 1977 முதல் 9 முறை எம்எல்ஏ-வாக இருந்தவர்.

சமாஜ்வாதியின் வாக்குகளை பிரிக்கும் வகையில் சிபிஐ சார்பிலும் அர்விந்த்சென் யாதவ் என்பவர் போட்டியிடுகிறார். ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அர்விந்த் சென்னின் தந்தையான மித்ராசென், 25 வருடங்களுக்கு முன் பைஸாபாத்தின் சிபிஐ எம்பி-யாக இருந்தவர். கூட்டணியில் இருந்த போதும் இந்தத் தொகுதியில் சிபிஐ தனித்துப் போட்டியிடுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சச்சிதானந்த் பாண்டே போட்டியிடுகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

பத்ம விருது பெற்றவர்களுக்கு ராஜ உபசரிப்பு... இரவு விருந்தளித்த அமைச்சர் அமித் ஷா!

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

நீட் தேர்வு முறைகேடு: பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு!

494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் தற்கொலை... மதிப்பெண்கள் குறைந்ததாக விபரீதம்!

பிகினி உடையில் ‘கங்குவா’ நாயகி... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in