பொறியியல் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

அண்ணா பல்கலைகழகம்
அண்ணா பல்கலைகழகம்

எதிர்வரும் 15-ம் தேதி நடைபெற இருந்த பொறியியல் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தப் பருவத்துக்கான செமஸ்டர் தேர்வுகள்  மே 15-ம் தேதி தொடங்கும் என  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தற்போது அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தமிழ்நாடு முழுவதும் 39 தொகுதிகளிலும் உள்ள முக்கிய பொறியியல் கல்லூரிகளில் தான்  வைக்கப்பட்டுள்ளன. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்லூரி  வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அத்தகைய கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்துவது இயலாத காரியம் என்பதால் 15-ம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இம்மாதம் 15 ம் தேதி  தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான பிறகு ஜூன் 6-ம் தேதியன்று தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in