பிகினி உடையில் ‘கங்குவா’ நாயகி... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

திஷா பதானி
திஷா பதானி

’கங்குவா’ பட நாயகி திஷா பதானி கொளுத்தும் கோடை வெயிலுக்கு இதமாக பிகினி உடையில் பீச்சில் ரிலாக்ஸ் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் பிஸியான நாயகியாக வலம் வரும் திஷா பதானி. தமிழில் சூர்யாவின் ‘கங்குவா’ மூலமாக அறிமுகமாக இருக்கிறார். இதற்கடுத்து, நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கல்கி ஏடி 2898’ படத்தையும் கைவசம் வைத்திருக்கிறார்.

சமூகவலைதளப் பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கும் திஷா, தனது கிளாமர் படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர தவறுவதில்லை. அந்த வகையில், இப்போது பிகினி உடையில் பீச்சில் தனது தோழிகளுடன் ரிலாக்ஸ் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்திருக்கிறார் திஷா.

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெஃராபின் மகன் டைகர் ஷெஃராப்புடன் முன்பு இவர் அடிக்கடி டேட்டிங் கிசுகிசுவில் சிக்குவதுண்டு. ஆனாலும், இந்த செய்திகள் வரும்போதெல்லாம் இதுகுறித்து இவர்கள் பொதுவெளியில் அதுகுறித்து மறுக்கவோ அல்லது ஒத்துக்கொள்ளவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை திஷா பதானி
நடிகை திஷா பதானி

ஆனால், பின்பு இந்த ஜோடி பிரிந்து விட்டது எனவும் சொல்லப்பட்டது. ஜாக்கி ஷெஃராப் வேறொரு நடிகையை காதலிக்கிறார் என்றும் தகவல் பரப்புகிறது பாலிவுட்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in