‘அயோத்தி ராமர் கோயிலில் பாபர் மசூதி இன்னும் இருப்பதாய் நம்புகிறோம்’ உணர்ச்சிப் பெருக்கில் ஒவைசி

அயோத்தி ராமர் கோயில் - ஒவைசி
அயோத்தி ராமர் கோயில் - ஒவைசி

ராமர் கோயில் இடத்தில் இன்னமும் பாபர் மசூதி உள்ளது என மக்களவையில் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்

அயோத்தி ராமர் கோவில் இடத்தில் பாபர் மசூதி என்றென்றும் இருக்கும் என தனது உணர்ச்சிகர உரையில் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி இன்று அறிவித்தார். ”அங்கே பாபர் மசூதி இருந்தது; இப்போதும் இருக்கிறது; என்றும் இருக்கும். இது எங்கள் நம்பிக்கை. பாபர் மசூதி வாழ்க” என்று மக்களவையில் ஒவைசி தனது உரையை முடித்தது பரபரப்பை உருவாக்கி உள்ளது.

பாபர் மசூதி
பாபர் மசூதி

ராமர் கோயில் தொடர்பாக மக்களவை விவாதத்தின்போது பேசிய ஒவைசி, 'ஒரு மதம் மற்றொரு மதத்தை வென்றது போன்ற தோற்றத்தை பாஜக அரசு ஏற்படுத்தி வருகிறது’ என குற்றம்சாட்டினார். தனது பேச்சின் நிறைவாக, “பாபர் மசூதி வாழ்க. இந்தியா வாழ்க. ஜெய் ஹிந்த்" என்றார்.

மேலும் அவர் பேசும்போது, “மோடி அரசு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அரசா, ஏதேனும் ஒரு மதத்தின் அரசா அல்லது முழு நாட்டின் அரசா என்று நான் கேட்க விரும்புகிறேன். இந்திய அரசுக்கு என தனியாக ஒரு மதம் உள்ளதா? ஒரு மதம் மற்ற மதத்தை வென்றது என்ற செய்தியை இந்த அரசு கொடுக்க விரும்புகிறதா?

நாட்டில் உள்ள 17 கோடி முஸ்லிம்களுக்கு நீங்கள் என்ன செய்தி சொல்கிறீர்கள்? நான் ராமரை மதிக்கிறேன்; ஆனால் நாதுராம் கோட்சேவை வெறுக்கிறேன். ஏனெனில் தான் மரிப்பதற்கு முன்பாக, இறுதி வார்த்தையாக ’ஹே ராம்’ என்ற காந்தியை அவர் கொன்றார்" என்று ஒவைசி முடித்தார்.

மக்களவை உரையில் ஒவைசி
மக்களவை உரையில் ஒவைசி

ராமர் கோயில் கட்டுமானத்தையும், அங்கே பாலராமர் சிலையை நிறுவி பக்தர்களின் வழிபாட்டுக்கு திறந்துவிட்டதையும் பாஜக தனது ஆட்சியின் சாதனைகளாக பறைசாற்றுகிறது. இதையொட்டி மதுரா, காசி உட்பட பல்வேறு இடங்களிலும் இந்து கோயில்களை ஆக்கிரமித்து அல்லது தகர்த்து இஸ்லாமியர்களின் மசூதிகள் எழுப்பப்பட்டிருப்பதாக புகார்கள் அதிகரித்துள்ளன. இதன் எதிரொலியாக உத்தராகண்ட் மாநிலத்தில் ஆக்கிரமிப்பின் பெயரில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதில் வன்முறைகளும் வெடித்துள்ளன. இந்த சூழலின் மத்தியில் ஒவைசியின் பாபர் மசூதி பேச்சு கவனம் பெற்றுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!

ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!

ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in