விஜயகாந்த் செய்த துரோகமே கலைஞர் உயிரைப் பறித்தது: ஆர்.எஸ்.பாரதி பேச்சால் பரபரப்பு!

ஆர்.எஸ்.பாரதி, கலைஞருடன் விஜயகாந்த்.
ஆர்.எஸ்.பாரதி, கலைஞருடன் விஜயகாந்த்.

விஜயகாந்த் செய்த துரோகம்தான் கலைஞர் உயிரைப் பறித்தது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர், ஸ்டாலினுடன் விஜயகாந்த்
கலைஞர், ஸ்டாலினுடன் விஜயகாந்த்

தமிழகத்திற்கு நிதி கொடுக்காத மத்திய அரசினைக் கண்டித்து திமுக சார்பில் நெல்லை மக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.. இதில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விஜயகாந்த் செய்த துரோகம்தான் கலைஞர் உயிரைப் பறித்தது எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது அவர் பேசுகையில், ”கலைஞர் இறந்தபோது அவரை நல்லடக்கம் செய்ய அண்ணா அருகில் இடம் கொடுக்காமல் மறுத்தவர் எடப்பாடி பழனிசாமி. அப்படியான கல் நெஞ்சம் கொண்டவர். ஆனால், யாரும் கேட்காமலேயே விஜயகாந்துக்குரிய அரசு மரியாதையை கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்.

ஆர்.எஸ். பாரதி
ஆர்.எஸ். பாரதி

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்திற்கு கலைஞர் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்காமல் தனியாக தேர்தலில் நின்றார் விஜயகாந்த். அவர் எங்கள் கூட்டணிக்கு வந்திருந்தால் நிச்சயம் கலைஞர் முதல்வராகி இருப்பார். அந்த தைரியத்தோடு அவர் உயிரோடும் இருந்திருப்பார்.

கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் ஜெயலலிதா இறந்திருக்க மாட்டார். உரிய மருத்துவ சிகிச்சை எடுத்து தற்போது வரை இருந்திருப்பார். இதற்கெல்லாம் காரணம் விஜயகாந்த் செய்த துரோகம்தான். இந்த துரோகத்தின் காரணமாகத்தான் கலைஞர் உயிரிழந்தார். அவர் இறக்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாமல் இறக்க காரணம் விஜயகாந்த் தான்” என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in