‘ஹரியாணாவில் இருந்தும் கூப்பிடுறாங்க...’ நேரடி அரசியலுக்கு அடிபோடும் சோனியா காந்தி மருமகன்

கணவர் ராபர்ட் வதேரா உடன் பிரியங்கா காந்தி
கணவர் ராபர்ட் வதேரா உடன் பிரியங்கா காந்தி

‘மக்களவைத் தேர்தலில் போட்டியிடுமாறு உத்தரபிரதேசம் மட்டுமன்றி ஹரியாணாவில் இருந்தும் அழைக்கிறார்கள்’ என மீண்டும் தனது அரசியல் ஆசையை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா.

”நான் நேரடி அரசியலில் இருந்து விலகியிருக்கவே விரும்புகிறேன். ஆனால் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுமாறு கட்சியினர் எனக்குத் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றனர். மேலும், காந்தி குடும்பத்துக்கு எதிராக என்னை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் மாற்றுக்கட்சியினரும் என்னை அரசியலுக்கு அழைக்கின்றனர்” என்று மீண்டும் தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தும் விதமாக, அலுத்துக்கொண்டிருக்கிறார் ராபர்ட் வதேரா.

காங்கிரஸ் வாரிசுகள்: சோனியா - ராகுல் - பிரியங்கா
காங்கிரஸ் வாரிசுகள்: சோனியா - ராகுல் - பிரியங்கா

சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, கடந்த சில மாதங்களாகவே நேரடி அரசியலில் குதிக்கத் துடித்து வருகிறார். பாஜகவின் பிரம்மாண்டத்துக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி கலகலத்துப் போயிருக்கும் சூழலில், தன்னால் ஏதேனும் மாற்றம் விளைவிக்க முடியும் என்பது போன்று ராபர்ட் வதேரா தொடர்ந்து தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தி வருகிறார்.

முன்னதாக அவர், கடந்த தேர்தலில் ராகுல் காந்தி தோல்வியுற்ற அமேதி தொகுதியில் இம்முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இந்த தேர்தலில் ராகுல் காந்தி கேரளத்தின் வயநாடு தொகுதியில் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அமேதியில் காந்தி குடும்பத்தினர் எவரும் போட்டியிட முன்வராததை அடுத்து, அந்த காலியிடத்தை நிரப்ப தானாக முன்வந்தார். ஆனால் காங்கிரஸ் தலைமை அவரை பொருட்படுத்துவதாக இல்லை.

எனவே, ஹரியாணாவில் இருந்து போட்டியிடுமாறு மக்கள் மத்தியிலிருந்து அழைப்பு வந்துள்ளதாக ராபர் ட் வதேரா இன்று தெரிவித்துள்ளார். வாய்ப்பு கிடைத்தால் உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மட்டுமன்றி ஹரியாணாவின் ஒரு தொகுதியில் இருந்தும் போட்டியிட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மனைவி பிரியங்கா காந்தியுடன் ராபர்ட் வதேரா(இடது)
மனைவி பிரியங்கா காந்தியுடன் ராபர்ட் வதேரா(இடது)

இது தவிர்த்து மாற்றுக்கட்சியினர் தன்னை பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாகவும், தங்கள் கட்சிக்கு அவர்கள் அழைப்பு விடுப்பதாகவும் ராபர்ட் தெரிவித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் தலைமைக்கு மறைமுக எச்சரிக்கையாகவும் அவரது பேட்டி அமைந்திருக்கிறது.

”நான் தீவிர அரசியலில் இறங்க வேண்டும் என்று நாடு விரும்புகிறது. காங்கிரஸ் கட்சிக்கு மாற்றத்தை கொண்டு வர முடியும் என நினைத்தால், தீவிர அரசியலுக்கு வருவேன். அமேதியில்தான் நான் போட்டியிட வேண்டும் என்றில்லை. மொராதாபாத் மற்றும் ஹரியானா மக்களும் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்" என்று ராபர்ட் வதேரா இன்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in