பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர்
காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர்

பாகிஸ்தான் அணுகுண்டுகள் வைத்திருப்பதால் இந்தியா அந்நாட்டை மதிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் கூறியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் கடந்த மாதம் அளித்ததாக கூறப்படும் பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் மணி சங்கர் ஐயர், "பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையெனில் நாடு பெரும் விலையை கொடுக்க நேரிடும். பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள் உள்ளன. நம்மிடமும் உள்ளன. நமது அரசாங்கம் அவர்களைக் கோபப்படுத்தினால், இந்தியா மீது அவர்கள் அணுகுண்டுகளை வீசக்கூடும்" என தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான்
இந்தியா, பாகிஸ்தான்

இந்நிலையில் மணிசங்கர் ஐயரின் இந்தப் பேச்சு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

மணிசங்கர் ஐயரின் சர்ச்சைக்குரிய இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாஜக எம்பி- ரவி கிஷன் கூறுகையில், "பாகிஸ்தான் உணவு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில் மணிசங்கர் ஐயர், அவர்களுக்கு மரியாதை கொடுக்க விரும்புகிறார். அவர் எங்காவது சிகிச்சை பெற வேண்டும். இது காங்கிரஸின் இந்தியா அல்ல. இப்போது இந்தியா மிகவும் சக்தி வாய்ந்தது. இது பிரதமர் மோடியின் இந்தியா” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சசி தரூரை எதிர்த்து திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், "ராகுல் காந்தியின் காங்கிரஸின் சித்தாந்தம் இந்தத் தேர்தலில் முழுமையாகத் தெரியும். அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சியாச்சினை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்க முன்வந்துவிட்டனர்" என தெரிவித்துள்ளனர்.

இதேபோல் பாஜகவின் பல்வேறு தலைவர்கள் மணிசங்கர் ஐயரையும், காங்கிரஸ் கட்சியையும் இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

பத்ம விருது பெற்றவர்களுக்கு ராஜ உபசரிப்பு... இரவு விருந்தளித்த அமைச்சர் அமித் ஷா!

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

நீட் தேர்வு முறைகேடு: பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு!

494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் தற்கொலை... மதிப்பெண்கள் குறைந்ததாக விபரீதம்!

பிகினி உடையில் ‘கங்குவா’ நாயகி... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in