திமுக அரசு மக்களின் கண்ணீரைத் துடைக்காமல் கண்ணீரை வரவழைக்கிறது... ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

"திமுக அரசு மக்களின் கண்ணீரைத் துடைக்காமல் கண்ணீரை வரவழைக்கிறது" என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், "தமிழகமெங்கும் குடிநீர் பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாக உள்ளது. நீர் மேலாண்மையிலே கோட்டை விட்டதே இதற்கு காரணம். குடிநீர் பற்றாக்குறையை போக்க தகுந்த முன்னேற்பாடுகளை இந்த அரசு கவனத்தில் கொள்ளவில்லையோ என்கிற மிகப்பெரிய கவலை ஏற்பட்டது. 32 வருவாய் மாவட்டங்களாக இருந்ததை 38 வருவாய் மாவட்டங்களாக நிர்வாக ரீதியாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயர்த்தினார். இன்றைக்கு 22 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. கிடைத்த மழை நீரை சேமித்து வைக்காதது தான் காரணம். அதனால் வறட்சியால் மக்கள் துன்பங்கள், துயரங்கள் அடைந்து வருகிறார்கள்.

கோப்புக்காட்சி
கோப்புக்காட்சி

இன்றைக்கு அரியலூர், கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருவள்ளூர், திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் வரை உள்ள 22 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கிறது.

ஊரக உள்ளாட்சி துறைக்கு 150 கோடி ரூபாயும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சிகள் துறை ஆகிய துறைக்கு தலா 75 கோடி என மொத்தம் 300 கோடி என்று இன்றைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

நகராட்சிகள், பேரூராட்சிகள் என மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளில் லாரிகள் மூலமாக மாற்று ஏற்பாட்டில் குடிநீர் வழங்குவதற்கு இந்த 75 கோடி என்பது போதிய அளவாக நிச்சயமாக இருக்காது. தண்ணீர் பற்றாக்குறையால், கண்ணீர் வடிக்கின்ற மக்களின் கண்ணீரை துடைப்பதற்கு பதிலாக கண்துடைப்பு நடவடிக்கையாக இந்த அரசு இதை எடுத்து இருக்கிறதோ என்கிற ஒரு ஐயம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. லாரியில் மூலம் தண்ணீர் வழங்குவது, தேவையான இடங்களில் ஆழ்குழாய் அமைப்ப,து நீரூற்றுகளை நாம் பலப்படுத்துவது, அதிலிருந்து நீரை எடுத்து சுத்திகரித்து அதை மக்களுக்கு வழங்குவது இந்த பல்வேறு இந்த சவால்களுக்கு இந்த 300 கோடி என்பது அதுவும் குறிப்பாக மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் 75 கோடி என்பதும் கண்துடைப்பாக தான் இந்த நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக உள்ளது.

அமைச்சர் உதயநிதி
அமைச்சர் உதயநிதி

நீர் மேலாண்மை திட்டமான மழைநீர் சேகரிப்பு திட்டம், குடி மராமத்து திட்டம் போன்றவற்றை அரசு முழுமையாக கைவிட்டதால் குடிநீர் தட்டுப்பாடு போன்ற தொடர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பயனுள்ள திட்டமான குடிமராமத்து திட்டத்தை இன்று நீங்கள் ரத்து செய்யாமல் இருந்திருந்தால் நிச்சயமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது. ஆகவே இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இந்த அரசு இனிமேலும் தூங்கிக் கொண்டு இல்லாமல் விழித்துக் கொண்டு மக்களின் கண்ணீரைத் துடைக்க முன்வருமா? அல்லது கண்துடைப்பு நாடகத்தை தொடருமா?" என்று கேள்வியெழுப்பினார்.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in