மின் உற்பத்தியை கையாள்வதில் திமுக அரசு பூஜ்ஜியம்... ஆர்.பி. உதயகுமார் காட்டம்!

ஆர்.பி. உதயகுமார்
ஆர்.பி. உதயகுமார்

"கோடையில் ஏற்படும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.150 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது, யானை பசிக்கு சோளப்பொரி கதையாக உள்ளது. மின் உற்பத்தியைக் கையாளுவதில் இந்த அரசு பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளது" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சர்வ சாதாரணமாக பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. தமிழகத்தின் பல இடங்களில் குடிநீர் பிரச்சினை தலைதூக்கி வருகிறது. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டு, தமிழக அரசை விமர்சித்து பேசியுள்ளார்.

அந்த வீடியோவில், "முறையாக குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தியிருந்தால், வடகிழக்கு பருவமழையால் நமக்கு கிடைத்த மழைநீரை குளங்கள், கண்மாய்கள், ஏரிகளில் சேமித்து இருக்க முடியும். ஆனால், முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆறுகள், ஏரிகள் போன்ற நீர் தேக்கங்கள் எல்லாம் வறண்டு காட்சியளிக்கின்றன.

கோப்புப்படம்
கோப்புப்படம்

முல்லை பெரியாறில் 115 அடி, பாபநாசம் அணையில் 57 அடி, மணிமுத்தாறு அணையில் 88.70 அடி நீர் மட்டுமே உள்ளது. பூண்டி, புழல், செம்பரபாக்கம், கண்ணன்கோட்டை, வீராணம் ஆகிய ஏரிகள் நிலைமை கவலைக்குரியதாக இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 44 அடி உயரம் கொண்ட கெலவரப்பள்ளி அணையின் நீர் இருப்பு தற்போது 26.08 அடியாக உள்ளது. அதேபோல் திருச்சியில் காவிரி கொள்ளிடம் பகுதியில் நீர்மட்டம் குறைந்துள்ளது. கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 12 அடியாக உள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அதில் 1 முதல் 40 அடி வரை சேறும் சகதியுமாக உள்ளதால், 15 அடி மட்டும் தண்ணீர் உள்ளது. இதனால் இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

ஆக இப்போது நீர்த்தேக்கங்களிலே 17 சதவீதம் தான் தண்ணீர் இருப்பதால் மாவட்டவாரியாக கூட்டுக் குடிநீர் திட்டம் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

தமிழக அரசு
தமிழக அரசு

இந்த புள்ளி விவரங்களைப் பார்த்தால், திமுக அரசு கையாளாகாத அரசாக இருக்கிறது. நீர் மேலாண்மையில் பூஜ்ஜியமாக இருக்கிறது திமுக அரசு. இந்த நிலையில் 19 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ. 150 கோடி ஒதுக்கியுள்ளது அரசு. இது யானை பசிக்கு சோளப்பொரி கதையாக உள்ளது.

ஒருபுறத்திலே வெப்ப அலை இரவு பகலாக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் மின்சார தேவை இதுவரை வரலாறு காணாத அளவிலே அதிகரித்திருக்கிறது. ஆனால், அதற்கு சமன் செய்கின்ற வகையில் உற்பத்தியை திமுக அரசு அதிகரிக்காத காரணத்தால் தனியாரிடத்தில் கொள்முதல் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்களுடைய தாதத்தை தீர்ப்பதற்கும், மின்சாரம் கிடைப்பதற்கும் கடந்த அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளை திமுக அரசு வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in