அதிமுக கூட்டணியில் பாமக?: ராமதாஸ், அதிமுக முன்னாள் அமைச்சர் திடீர் சந்திப்பால் பரபரப்பு!

மருத்துவர் ராமதாஸ், சி.வி.சண்முகம் சந்திப்பு
மருத்துவர் ராமதாஸ், சி.வி.சண்முகம் சந்திப்பு

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் ராமதாசுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்புமணி, எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா
அன்புமணி, எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா

இந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உள்ளது. இதில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது.

அதேபோல், நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட உள்ளது. ஆனால், அதிமுக - பாஜக கூட்டணி உடைந்த நிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிலை என்ன என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம், அக்கூட்டணியில் அதிமுக - பாஜக தவிர்த்து 3வது பெரிய கட்சியாக இருந்தது பாமக.

அன்புமணி
அன்புமணி

இந்த சூழலில் கடந்த வாரம் நடத்தப்பட்ட பாமக பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சி மக்களவை தேர்தலைக் கூட்டணி அமைத்து எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கூட்டணி குறித்த முடிவை அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முடிவு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு மத்திய அமைச்சர் பதவி பெறும் நோக்குடன் அக்கட்சி இருப்பதால், பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என பல தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்காக பாஜவுடனான - பாமக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

12 தொகுதிகள் வரை பாமக கேட்டதாகவும், பாஜக 7 தொகுதிகள் வரை ஒதுக்க முன் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை இன்று சந்தித்துப் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி, மருத்துவர் ராமதாஸ்
எடப்பாடி பழனிசாமி, மருத்துவர் ராமதாஸ்

அப்போது, மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக இருவரும் விவாதித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பாமக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்தும் இருவரும் பேசியதாகத் தெரிகிறது. இதன் மூலம் அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏனெனில், கூட்டணி பேச்சுவார்த்தை உறுதியானால் மட்டுமே பாமக தரப்பில் பேச்சு வார்த்தை நடத்துவது வாடிக்கை. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவுக்கு 7 மக்களவை மற்றும் 1 மாநிலங்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதற்குக் கூடுதலாகவோ அல்லது அதற்கு இணையான தொகுதிகளைக் கேட்டுப் பெரும் முனைப்பில் பாமக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in