தேசிய ஜனநாயக கூட்டணியில் ராஜ் தாக்கரே?: அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தார்!

அமித்ஷாவுடன் ராஜ் தாக்கரே.
அமித்ஷாவுடன் ராஜ் தாக்கரே.

மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரே இன்று சந்தித்து பேசியுள்ளார்.

ராஜ் தாக்கரே
ராஜ் தாக்கரே

மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா(எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் இன்று சந்தித்து பேசியுள்ளார். மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக- சிவசேனா கூட்டணியுடன் எம்என்எஸ் இணையும் என்ற தகவலை இந்த சந்திப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக மாநில தலைவர் சந்திரசேகர் பவனான்குலே ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு டெல்லிக்கு மகாராஷ்டிரா நவநிர்மான சேனா தலைவர் ராஜ் தாக்கரே சென்றுள்ளார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தெற்கு மும்பை, ஷீரடி ஆகிய இரண்டு இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணியில் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கேட்கலாம் என்ற யூகங்களும் கிளம்பியுள்ளன. ராஜ் தாக்கரே, சிவசேனா முன்னாள் தலைவர் பால் தாக்கரேவின் மருமகன் ஆவார்.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா(யுபிடி) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், ராஜ் தாக்கரே அமித் ஷாவை சந்தித்து தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


ஷாக்... நடுக்கடலில் விழுந்து நொறுங்கிய இந்திய கடற்படை விமானம்!

விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை... பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

நள்ளிரவு ஒரு மணிக்கு பொங்கல்...  50 ஆடுகளை வெட்டி 3,000 ஆண்களுக்கு விருந்து!

பிரேமலதா விஜயகாந்த் மீது பாய்ந்தது வழக்கு...தேர்தல் விதிமுறை மீறியதாக அதிரடி!

வனவிலங்குகளுடன் செல்ஃபி எடுக்கப் போறீங்களா?... 7 ஆண்டு சிறை உறுதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in