அதானியும் அம்பானியும் மோடியை காப்பாற்றுவார்களா?... ராகுல் காந்தியின் இன்றைய கிண்டல்

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

‘10 ஆண்டு கால ஆட்சியில், தனது ஆயிரத்துக்கும் மேற்பட்ட உரைகளில் இதுவரை தனது நண்பர்கள் அதானி - அம்பானி குறித்து வாய் திறககாத மோடி, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஒருவழியாக அவர்கள் குறித்து பேசியிருக்கிறார்’ என்று இன்றைய தினம் கிண்டல் செய்திருக்கிறார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி குறிப்பிட்டது போல, பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் பலமுறை அதானி - அம்பானி குறித்த கேள்விகளை எழுப்பியபோதெல்லாம் மவுனமாகவே இருந்துள்ளார் மோடி. தற்போது ராகுல் காந்தியை பழிக்கும் நோக்கில் அம்பானி - அதானி குறித்து மோடி பேசியிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகி இருக்கிறது. குறிப்பாக மோடிக்கு நேரெதிர் போட்டியாளரான ராகுல் காந்தி, இந்த வாய்ப்பை கச்சிதமாக பிடித்துக்கொண்டுள்ளார்.

முகேஷ் அம்பானி- கௌதம் அதானி
முகேஷ் அம்பானி- கௌதம் அதானி

இன்றைய தினம் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கன்னூஜில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை அதானி - அம்பானியை முன்வைத்து வாரினார். ”பிரதமர் மோடி தனது நண்பர்களான அம்பானி - அதானி குறித்து கடந்த 10 ஆண்டுகளின் பல்லாயிரம் உரைகளின் போது வாய் திறக்க மறுத்தார். தற்போது எதிர்க்கட்சியினரின் நெருக்கடி காரணமாக, வேறுவழியின்றி அவர்களது பெயர்களை உச்சரித்திருக்கிறார்” என்று சாடியுள்ளார்.

அப்போது மோடி போலவே பாவனை செய்த ராகுல் காந்தி, “எதிர்க்கட்சியினர் என்னை சுற்றி வளைத்து நெருக்குகின்றனர். நான் தோற்றுக்கொண்டிருக்கிறேன். எனவே அதானி, அம்பானி என்னை காப்பாற்றுங்கள்” என்று பேசிக்காட்டினார். மேலும் அதானி அம்பானி ஆகியோரை முன்வைத்து மோடி தன்னை தாக்கியது குறித்தும் ராகுல் காந்தி மீண்டும் கிளறினார். அம்பானி - அதானி குறித்து பேசாதிருக்க அவர்களிடம் டெம்போ வாகனம் நிறைய ராகுல் காந்தி பணம் பெற்றதாக மோடி குற்றம்சாட்டியது குறித்து ராகுல் காந்தி மறுபடியும் இன்று கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

”மோடிக்கு இவ்வாறு டெம்போ வாகனம் நிறைய பணம் பெற்ற அனுபவம் இருக்கிறது. குறிப்பாக அதானி டெம்போவில் கருப்பு பணம் அனுப்புவார் என்பதையும் மோடி அறிந்திருக்கிறார். ஆனால் இந்த விவகாரத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, அடுத்த இரண்டொரு வாரங்களுக்கு மோடியும் அமித் ஷாவும் எதையாவது செய்வார்கள். மக்கள் கவனம் சிதற வேண்டாம்” என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையும் வாசிக்கலாமே...

பத்ம விருது பெற்றவர்களுக்கு ராஜ உபசரிப்பு... இரவு விருந்தளித்த அமைச்சர் அமித் ஷா!

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

நீட் தேர்வு முறைகேடு: பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு!

494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் தற்கொலை... மதிப்பெண்கள் குறைந்ததாக விபரீதம்!

பிகினி உடையில் ‘கங்குவா’ நாயகி... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in