‘ரெய்டு நடத்தி நிதி வசூலிப்பது எப்படி என்று கற்றுத்தரும் ஊழல் பள்ளியை நடத்தி வருகிறார் மோடி’ கடுமையாக சாடும் ராகுல் காந்தி

பள்ளி மாணவ மாணவியருடனான சந்திப்பு ஒன்றில் ராகுல் காந்தி
பள்ளி மாணவ மாணவியருடனான சந்திப்பு ஒன்றில் ராகுல் காந்தி

‘மத்திய விசாரணை அமைப்புகளை ஏவி ரெய்டுகளை நடத்தி நன்கொடை வசூலிப்பது என்பதை கற்றுத்தரும் ஊழல் பள்ளியை நடத்தி வருகிறார் பிரதமர் மோடி’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தாக்குதல் தொடுத்துள்ளார்.

ஆளும் பாஜக மூன்றாம் முறையாக ஆட்சி அமைப்பதை தடுப்பது அல்லது குறைந்தபட்சம் அவர்களின் அசுர வெற்றியை சரிப்பது என்பதை இலக்காகக் கொண்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தேர்தல் பிரச்சாரக் களத்தில் தீவிரமாக பரப்புரை செய்துவருகின்றனர்.

இவற்றில் பாஜகவுக்கு எதிரான முக்கிய அஸ்திரமாக தேர்தல் பத்திரம் திட்டத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்டதில், பாஜகவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான தாக்குதல்களில் ராகுல் காந்தியும் தீவிரம் காட்டுகிறார்.

காங்கிரஸின் ராகுல் - பாஜகவின் மோடி
காங்கிரஸின் ராகுல் - பாஜகவின் மோடி

இந்த வகையில் இன்றைய தினம் அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக சாடி உள்ளார். ”நரேந்திர மோடி, நாட்டில் ஊழல் பள்ளியை நடத்தி வருகிறார். அங்கு 'முழு ஊழல் அறிவியல்' பாடத்தின் கீழ், 'நன்கொடை வணிகம்' உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் அவரே விரிவாகக் கற்பிக்கிறார்" என்று இந்தியில் அமைந்த அந்த பதிவு தொடங்குகிறது.

"ரெய்டு நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி? நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன? ஊழல்வாதிகளை கழுவும் ’வாஷிங் மெஷின்’ எப்படி வேலை செய்கிறது? மத்திய விசாரணை ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக்கி 'ஜாமீன் - ஜெயில்' விளையாட்டு எவ்வாறு விளையாடப்படுகிறது?" என்று அந்தப் பதிவில் அடுக்கடுக்கான கேள்விகளை ராகுல் எழுப்பியுள்ளார்.

”பாஜக ஒரு ஊழல் குகையாக மாறியுள்ளது. இந்த 'கிராஷ் கோர்ஸை' அதன் தலைவர்களுக்கு பாஜக கட்டாயப் கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு நாடு செலுத்தும் விலை கடினமானது. இந்தியா கூட்டணி தலைமையிலான அரசு அமைந்ததும் இந்த ஊழல் பள்ளிக்கு பூட்டு போடப்படுவதோடு. இந்த பாடத்திட்டத்தை என்றென்றும் மூடும்படி செய்யப்படும்" எனவும் ராகுல்காந்தி உறுதி அளித்திருந்தார். இந்த பதிவுக்கு பொருத்தமாக ராகுல் இணைத்திருக்கும் பிரச்சார சாடல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியை 'ஊழலின் சாம்பியன்' என்றும், பாஜகவின் தேர்தல் பத்திரம் திட்டத்தை 'உலகின் மிகப்பெரும் மிரட்டி பணம் பறிக்கும் திட்டம்' என்றும் வர்ணித்ததன் சில தினங்களில், இன்றைய கிண்டலுடன் கூடிய அரசியல் சீண்டலை ராகுல் காந்தி பதிவிட்டிருக்கிறார் .

இதையும் வாசிக்கலாமே...

வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

ஆந்திராவில் போட்டியிடும் அமைச்சர் ரோஜா திருத்தணியில் மகனுடன் மனமுருக வழிபாடு... வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in