30 லட்சம் பணியிடங்களை நிரப்பும் பணி ஆகஸ்டு 15ல் தொடங்கும்... இளைஞர்களுக்கு ராகுல் காந்தி உறுதி!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கான பணியை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் இந்திய அரசு தொடங்கும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்

இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், "மோடியால் பிரதமராக முடியாது, அதனால் அடுத்த 4-5 நாட்களுக்கு உங்கள் கவனத்தை திசை திருப்ப முடிவு செய்துள்ளார். அவர் ஏதாவது நாடகம் அல்லது வேறு ஏதாவது செய்வார். ஆனால் உங்கள் கவனத்தை திசை திருப்பவிடக் கூடாது. வேலையில்லா திண்டாட்டம் ஒரு முக்கிய பிரச்சினை. நரேந்திர மோடி 2 கோடி வேலைவாய்ப்புகளுக்கு வாக்குறுதி அளித்தார். ஆனால் அது பொய். பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி மற்றும் அதானி போன்றவர்களுக்கு அவர் சேவை செய்தார்" என்று ராகுல் காந்தி கூறினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மேலும், " வரும் ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்பும் பணி தொடங்கும்" என்று அவர் கூறினார்.

அதானி-அம்பானி குறித்து பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார் என்று நேற்று நரேந்திர மோடி விமர்சனம் செய்திருந்தார். ‘தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அம்பானி- அதானியை தாக்குவதை ராகுல் நிறுத்திவிட்டார். அவர் அம்பானி-அதானியிடம் இருந்து டெம்போவில் எவ்வளவு பணம் வாங்கினார்’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு இந்த வீடியோவில் பதிலளித்த ராகுல் காந்தி, "மோடி ஜி, நீங்கள் பயப்படுகிறீர்களா? பொதுவாக நீங்கள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் அதானி மற்றும் அம்பானியைப் பற்றி பேசுகிறீர்கள், ஆனால் முதல் முறையாக அதானி மற்றும் அம்பானி பற்றி பொதுவில் பேசியுள்ளீர்கள். டெம்போவில் அவர்கள் பணம் தருகிறார்கள் என்பது உங்களுக்கும் தெரியும். அது உங்களது தனிப்பட்ட அனுபவமா? ஒரு விஷயம் செய்யுங்கள். அவர்களிடம் சிபிஐ, அமலாக்கத்துறையை அனுப்பி விரிவான விசாரணை நடத்துங்கள், பயப்பட வேண்டாம்" என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

வெயில் காலங்களுக்கு எனர்ஜி தரும் சூப்பர் பானங்கள்!

ஒரே பள்ளியில் பயின்ற 13 இரட்டையர்களும் பத்தாம் வகுப்பில் பாஸ்!

லாரியின் உள்ளே ரகசிய அறை வைத்து எடுத்துச் சென்ற ரூ.8 கோடி... ஆந்திராவில் பரபரப்பு!

சென்னை வந்தும் சூர்யாவின் பெற்றோரை பார்க்காத ஜோதிகா... பற்றி எரியும் குடும்பப் பிரச்சினை!

இளையராஜா தன் வழக்கு மூலம் புது டிரெண்டை உருவாக்குகிறார்... வழக்கறிஞர் அதிரடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in