சூர்யாவின் பெற்றோரை பார்க்காமல் போன ஜோதிகா... பற்றி எரியும் குடும்பப் பிரச்சினை!

சிவகுமார், ஜோதிகா, சூர்யா
சிவகுமார், ஜோதிகா, சூர்யா

நடிகர் சூர்யா- ஜோதிகா குடும்பத்திற்குள் பஞ்சாயத்து வெடித்திருக்கிறது என்ற செய்தி கடந்த சில மாதங்களாகவே உலா வருகிறது. அதையெல்லாம் இல்லை என ஜோதிகா மறுத்தாலும் சமீபத்தில் சென்னை வந்தவர் ஏன் தனது மாமனார்-மாமியாரை சென்று பார்க்கவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நடிகர்கள் சூர்யா- ஜோதிகா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களது திருமணத்திற்கு ஆரம்பத்தில் சம்மதிக்காத நடிகர் சிவகுமார் பின்பு சம்மதம் தெரிவித்தார். திருமணம் ஆகி தங்களது குழந்தைகள் தியா, தேவ் இருவரும் ஓரளவு வளரும் வரை சென்னையில் சூர்யா குடும்பத்துடன் தங்கி இருந்தார் ஜோதிகா.

சூர்யா- ஜோதிகா தங்கள் குழந்தைகளுடன்...
சூர்யா- ஜோதிகா தங்கள் குழந்தைகளுடன்...

இந்த நிலையில் திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் தங்கள் குழந்தைகளோடு மும்பைக்கு குடி போனார்கள். இதுமட்டுமல்லாது, மும்பையிலேயே தனியாக வீடு வாங்கி செட்டிலானதும் ரசிகர்களின் புருவத்தை உயர்த்தியது. ’சூர்யாவின் பெற்றோருடன் ஜோதிகாவுக்கு மனக்கசப்பு. அதனால் தான் அவர் சூர்யாவையும் குழந்தைகளையும் தன்னுடைய ஊரான மும்பைக்குக் கூட்டிச் சென்றுவிட்டார்’ எனவும் செய்தி கிளம்பியது.

ஆனால், "இதெல்லாம் வெறும் வதந்தி! குழந்தைகளின் படிப்பிற்காகத்தான் மும்பை சென்றோம்" என்று பதிலளித்தார் ஜோதிகா. மும்பைக்குச் சென்றதும் பாலிவுட்டிலும் அடுத்தடுத்து படங்கள் கமிட் ஆகி பிஸியானார் ஜோதிகா. இப்படியான சூழலில் தான் சமீபத்தில் தனது ‘ஸ்ரீகாந்த்’ படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் ஜோதிகா.

நடிகை ஜோதிகா
நடிகை ஜோதிகா

அப்படி வந்தவர், செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததும் உடனே அங்கிருந்து மும்பை கிளம்பி விட்டார். ’மும்பையில் இருந்து சென்னைக்கு இவ்வளவு தூரம் வந்தவர் ஏன் சூர்யாவின் பெற்றோரைக் கூட பார்க்கவில்லை... அப்படியானால் கேள்விப்பட்ட குடும்ப பஞ்சாயத்து விஷயங்கள் எல்லாம் உண்மைதானா?’ என்றெல்லாம் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், விஜயின் அரசியல் வருகை குறித்தான கேள்விக்கு, ”அவுட் ஆஃப் டாபிக்” என்றார் ஜோதிகா. இதனால், விஜயின் அரசியல் வருகை ஜோதிகாவுக்கு பிடிக்கவில்லையா என்றும் கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in