குளிர்பானங்களைத் தவிர்த்திடுங்க... வெயில் காலத்தில் ஆரோக்கியம் தரும் பழச்சாறு வகைகள்!

வெப் ஸ்டோரீஸ்

வெயில் காலங்களில் குளிர்பானங்களைத் தவிர்த்திடுங்க.. தினம் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் குறையும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதய நோய்களின் அபாயம் குறையும்.

rsooll

வெயில் காலத்திற்கு தோதான ஜூஸ் பீட்ரூட். உடல் வறட்சியைக் குறைத்து, வெப்பநிலை அதிகரிக்கும் வெயில் காலங்களில் ரத்த அழுத்தத்தை சீராக்க பீட்ரூட் ஜூஸ் பெஸ்ட் சாய்ஸ்.

P.V.R.M

ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால் முடி உதிர்தல், பொடுகுத் தொந்தரவு சரியாகும். இதயத்துக்கு வலு தரும். கொழுப்பைக் குறைப்பதால் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு பெஸ்ட் ஜூஸ்.

WS-Studio

கேரட் ஜூஸ் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும். நரம்புகளில் ரத்த ஓட்டம் மேம்படும். முடி உதிர்தலைத் தடுக்கும். குடல் சுத்தமாகும். கண் பார்வை மேம்படும். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும்.

Linda Hughes Photography

சப்போட்டா ஜூஸ் எலும்புகளுக்கு நல்லது. மலச்சிக்கல் நிவாரணி என்கிறார்கள். வைரஸ், பாக்டீரியாக்களை எதிர்க்கிறது. வயிற்றுப் போக்குக்கான அருமருந்தாகவும் உதவுகிறது. சிறுநீரக கற்களைக் கரைப்பதிலும் உதவுகிறது.

sri widyowati

அன்னாசி ஜூஸில் வைட்டமின்கள் பி, சி இருப்பதால் செரிமானம் சீராக இயங்கும். ரத்தக் குறைபாடு, தொண்டைப் புண், இருமல் போன்றவற்றையும் குணமாக்கும். கெட்டக் கொழுப்பை குறைக்கும். கர்ப்பிணிகள் தவிர்க்கலாம்.

Charles Brutlag

நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் உடல் எடை குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது. முடி உதிர்தலைத் தவிர்க்கும்.

SAM THOMAS A

திராட்சை ஜூஸ் ரத்தத்தை சுத்திகரிக்கும். உடலில் ஏற்படும் கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுக்குள் வைக்கிறது. சரும பளபளப்பு கூடும். புற்றுநோயைத் தடுக்கும்.

5PH