ராகுல் சாலைத் தடுப்பை தாண்டியது அப்பட்டமான போக்குவரத்து விதிமீறல்... சொல்கிறார் அண்ணாமலை!

அண்ணாமலை பிரச்சாரம்
அண்ணாமலை பிரச்சாரம்

கோவையில் இனிப்பு வாங்குவதற்காக ராகுல் காந்தி சாலைத் தடுப்பை தாண்டிச் சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதிமீறல் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை இன்று சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ராகுல் காந்தி சாலைத் தடுப்பை தாண்டிச் சென்றது என்பது போக்குவரத்து விதி மீறல். இதே அண்ணாமலை என்றால் திமுகவும், கோவை காவல்துறையும் கிளம்பி வருவார்கள். மூத்த அரசியல் தலைவர் ராகுல் காந்தியின் செயல் இளைஞர்களுக்கு என்ன கருத்தை சொல்கிறது? இதை திமுகவினரும் ஸ்டாலினும் கொண்டாடி வருகின்றனர். அண்ணாமலைக்கு ஒரு நியாயம், ராகுல்காந்தி ஒரு நியாயம். ராகுல்காந்தி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

சாலைத் தடுப்பை தாண்டிக் குதிக்கும் ராகுல் காந்தி
சாலைத் தடுப்பை தாண்டிக் குதிக்கும் ராகுல் காந்தி

மேலும், “சட்டத்தை நிலைநாட்டும் போது தான் சட்டத்தின் மீது மரியாதை வரும். ஸ்டாலினுக்குத்தான் பயம் வந்து உள்ளது. ராகுல்காந்தி வயநாட்டிற்கு செல்லும் போது கம்யூனிஸ்ட்கள் எதிர்த்துள்ளனர். எல்லைத் தாண்டி இங்கு வந்தால் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர் என்கின்றனர். இதுதான் இந்தியா கூட்டணியின் நிலை. ஸ்டாலின் அவர் மீது நம்பிக்கை இல்லாததால், ராகுல்காந்தியை அழைத்து வருகிறார். அண்ணாமலையை தோற்கடிக்க திமுகவே இங்கு நின்றது. தோற்கடிக்க முடியாது என்பதால் ராகுல்காந்தியை அழைத்து வந்து உள்ளனர். கோவை மக்களின் அன்பு மோடிக்கு உள்ளது. 60% வாக்குகள் கிடைக்கும்.” என்றார்.

அண்ணாமலை
அண்ணாமலை

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக தொண்டர்கள் வெளியே வந்து பாஜகவில் இணைந்து மோடியின் பக்கம் வந்து உள்ளனர். சூலூர், பல்லடம் பகுதிகளில் அதிமுகவைச் சேர்ந்த முக்கியமானவர்கள் பாஜக பக்கம் வந்து உள்ளனர், களத்தில் வேலை செய்கின்றனர். அதிமுக வின் நிலையை அவர்கள் ஏசியில் இருந்து வெளியே வந்து எட்டி பார்க்க வேண்டும். தேசிய தேர்தல், பிரதமருக்கான தேர்தல், பிரதமர் வேட்பாளர் இல்லாமல் ஓட்டி வருகின்றனர். பண பலத்தை வைத்து திமுக வெற்றி பெறப் போவதாக நம்புகிறது. அதை உடைத்து நாங்கள் வெற்றிப் பெறுவோம். தூத்துக்குடியில் தமாகா வேட்பாளர் மிகப்பெரிய வெற்றி பெறுவார்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in